தனுஷின் 5 பிளாக்பஸ்டர் படங்களை மிஸ் பண்ணிய டாப் ஹீரோக்கள்.. அட! ரஜினிக்கு சொன்ன கதையா இது?

Dhanush: ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டார் என்று சொல்வார்கள். தனுஷை பொறுத்த வரைக்கும் ஓவர் நைட்டில் யோசித்து சரியான கதைகளை செலக்ட் செய்ததால் இப்போது ஒபாமா பார்க்கும் படங்களில் கூட நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலகட்டத்தில் தடுமாறிக் கொண்டிருந்த தனுஷ் இன்று உலகதர நாயகனதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்த கதைகள் தான். இப்படி தனுஷுக்கு வெற்றியைத் தேடித் தந்த ஐந்து படங்களை ரிஜெக்ட் செய்த ஹீரோக்களை பற்றி பார்க்கலாம்.

தனுஷின் 5 பிளாக்பஸ்டர் படங்களை மிஸ் பண்ணிய டாப் ஹீரோக்கள்

அனேகன்: ஒரு வித்தியாசமான கதை அனுபவத்தை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை குதூகளிக்க வைத்த படம் அனேகன்.

படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. முதலில் இந்த படத்தை நடிகர் விஜய்க்கு தான் ரெடி பண்ணி இருக்கிறார் கே வி ஆனந்த். ஆனால் விஜய்க்கு கால்ஷீட் பிரச்சினைகள் இருந்ததால் இந்த படம் தனுஷ் கைவசம் போயிருக்கிறது.

வட சென்னை: வடசென்னை இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு எப்போது வரும் என இன்று வரை ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான் என விஜய் சேதுபதி விடுதலை பட விழாவில் போது அறிவித்தது எல்லோருக்குமே தெரியும்.

அசுரன்: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் தனுசுக்கு கேரியர் பெஸ்ட் என்று சொல்லலாம். இந்த படத்தில் கதையை வெற்றிமாறன் முதலில் நடிகர் ரஜினிகாந்த் தான் சொல்லி இருக்கிறார்.

கதைக்களம் சிக்கலானது என்பதால் ரஜினி இந்த படத்தை ஒத்துக் கொள்ளவில்லை.

திருச்சிற்றம்பலம்: யாரடி நீ மோகினி வெற்றியை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் மீண்டும் நயன்தாராவுடன் நடிக்க தனுஷ் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்.

ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் நித்யா மேனன் இணைந்தார். மேலும் நித்யா மேனன் நடித்த இந்த ஷோபனா கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ஆடுகளம்: நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கொடுத்து அலங்கரித்த படம் தான் ஆடுகளம். இந்த படத்தில் முதலில் டாப்சி கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகை திரிஷா. ஒரு சில காரணங்களால் சில காட்சிகள் மட்டுமே நடித்து இந்த படத்தில் இருந்து த்ரிஷா விலகி இருக்கிறார்.

Leave a Comment