Dhanush: நிறைய முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தில் கமிட் ஆகி பின்னர் ஒரு சில காரணங்களால் அதிலிருந்து விலகி இருப்பார்கள். அப்படித்தான் நடிகர் தனுஷ் கூட ஒரு சில படங்களில் கமிட் ஆகி, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியான பின்னர் அந்த படங்களில் இருந்து விலகி இருக்கிறார். அதிலும் தன்னுடைய ஆதர்ஷ இயக்குனர்களின் படத்திலிருந்து கூட விலகி இருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
இது மாலை நேரத்து மயக்கம்: இது மாலை நேரத்து மயக்கம் என்னும் ஸ்கிரிப்டில் முதலில் நடிக்க கார்த்தி மற்றும் சந்தியா அணுகப்பட்டார்கள். அது ஒர்க் அவுட் ஆகாததால் இந்த ஸ்கிரிப்டில் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடிக்க வைக்க ஒப்பந்தமானார்கள். அதற்கான போஸ்டர் கூட வெளியிடப்பட்டது. ஆனால் தயாரிப்பு தரப்பின் சிக்கல்கள் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி படத்தை வேறு நடிகர்களை வைத்து இயக்கி கடந்த 2015 ஆம் ஆண்டு படம் ரிலீஸ் ஆனது.

டாக்டர்ஸ்: காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் கெமிஸ்ட்ரியில் உருவாக இருந்த படம் தான் டாக்டர்ஸ். இந்த படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க இருந்தார். படத்தின் போஸ்டர் கூட வெளியானது. இந்த போஸ்டரில் தனுஷை பார்க்கும் பொழுது சைக்கோ கில்லர் மாதிரி தான் இருக்கும். ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை: வெற்றிமாறன், தனுஷ், ஜிவி பிரகாஷ் கூட்டணியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் தான் பொல்லாதவன். அதே கூட்டணி மீண்டும் இணைந்து தேசிய நெடுஞ்சாலை என்னும் படத்தில் பணி புரிய இருந்திருக்கிறார்கள். படத்தின் போஸ்டர் வெளியான பிறகு ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டிருக்கிறது.

சூதாடி: தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கெமிஸ்ட்ரியில் உருவான படம் ஆடுகளம். அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் சூதாடி என்னும் படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்த படத்தை சமந்தா, பார்த்திபன் மீனாட்சி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு ஆரம்பித்து ஒரு சில மாதத்தில் திடீரென வெற்றிமாறன் இந்த படத்தை கைவிட்டிருக்கிறார்.

திருடன் போலீஸ்: இயக்குனர் செல்வராகவனின் பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் அரவிந்த் கிருஷ்ணா. இவருடைய இயக்கத்தில் தான் தனுஷ் திருடன் போலீஸ் என்னும் படத்தில் நடிப்பதாக இருந்தது. புதுப்பேட்டை படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்த படம் ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டது.

- தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு சாபம் விட்ட தயாரிப்பாளர்
- பல வருட பழியை தீர்த்துக் கொண்ட தனுஷ்
- விஜய்யை ஓரங்கட்ட நினைக்கும் தனுஷின் மாஸ்டர் பிளான்