திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

திருப்பதியில் இருந்து துரத்தி விடப்பட்ட தனுஷ் படப்பிடிப்பு.. விசுவாசிகள் செய்த வேலையால் வந்த விளைவு

Actor Dhanush D51 movie shooting temporarily stopped in Tirupati: கேப்டன் மில்லரின் வெற்றிக்கு பின் தனுஷின் பார்வை பான் இந்தியா மூவியாக உள்ளது. தனுஷின் ஐம்பதாவது படமான D50 படத்தை அவரே இயக்கி நடிக்க திட்டமிட்டு உள்ளார். அது தவிர மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன், ஹச் வினோத் என முன்னணி இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களுக்கு கமிட் ஆகி உள்ளார்.

தற்போது D51 என பெயரிடப்பட்டுள்ள சேகர் கம்முலாவின் இயக்கத்தில் பான் இந்தியா மூவியில் நடித்து வருகிறார். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய் இல்ல, மூணு மாங்காவாக ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இப்படம் தயாராகி வருகிறது.  தனுசு உடன் ரஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

D51 படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிதி பகுதியில் நடத்தப்பட்டது. படப்பிடிப்பு முறைப்படி அனுமதி வாங்கி  நடந்து கொண்டிருந்தது. திருமலைக்குச் செல்லும் பக்தர்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டனர். மிகவும் குறுகலாக உள்ள இந்த பாதையில் கிட்டத்தட்ட ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இதனால் அங்குள்ள மக்கள் ஊழியர்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Also read: சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

அந்த வழியை பயன்படுத்தும் உள்ளூர் மக்களுக்கும் படப்பிடிப்பை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த தனுஷின் பவுன்சர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் படப்பிடிப்பிற்கான பெர்மிஷனை கண்டுகொள்ளாமல் அங்குள்ள காவல் துறை மற்றும் பிஜேபி நிர்வாகிகள் படப்பிடிப்பை காலி செய்யுமாறு பட குழுவினரை விரட்டி அடித்தனர். வேறு வழி இன்றி படப்பிடிப்பை நிறுத்தினர் பட குழுவினர்.

செய்வதறியாது திகைத்த தனுஷும் அவரது பட குழுவினரும் பிஜேபி நிர்வாகிகளை சமரசம் செய்ய, சமரசம் தோல்வியில் முடிந்தது. பெர்மிஷன் கொடுத்த ஆந்திரா கவர்மெண்ட் படக்குழுவினருக்கு சப்போர்ட் செய்யவில்லை. படப்பிடிப்பு பாதியுடன் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது வேறு லொகேஷன் தேடி திரிகின்றனர் படக் குழுவினர்.

சமீபத்தில் தான் மாமாவும் மருமகனும் அயோத்திக்கு போய் பிரதமருக்கு, பிஜேபிக்கு ஆதரவு என்கிற மாதிரி செய்திகள் வந்த நிலையில், இப்போது அதே பிஜேபி நிர்வாகிகளால் அடித்து விரட்டப்பட்டதால் மனம் நொந்து போய் உள்ளார் நம்ம பொல்லாதவன் தனுஷ்.

Also read: ரஜினியை காப்பி அடித்து அசிங்கப்பட்ட தனுஷ்.. புலியை பார்த்து சூடு போட்டு மாட்டிக்கொண்ட அவலம்

Trending News