வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பாசத்தை மட்டும் விட்டுக் கொடுக்காத தனுஷ்.. மறைமுகமாக ஐஸ்வர்யாவிற்காக செய்யும் காரியம்

Actor Dhanush is indirectly helping Aishwarya Rajinikanth: பொங்கலுக்கு ரிலீசாக வேண்டிய லால் சலாம் திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப் போய், இன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மொய்தின் பாய் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருப்பதால், இந்த படத்தை சூப்பர் ஸ்டார் படமாகவே ரசிகர்கள் திரையரங்கில் ஆர்ப்பரித்துக் கொண்டாடுகின்றனர்.

கிரிக்கெட்டை மையமாகவும், ஹிந்து- முஸ்லிம் மதவெறிக்கு எதிராக குரல் கொடுக்கும் படமாக இந்த படத்தின் கதை அமைந்திருக்கிறது. இதில் ரஜினியுடன் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார்.

இதனால் அவருடைய கணவரும் நடிகருமான தனுஷும் தன்னுடைய பங்கிற்கு லால் சலாம் படத்திற்காக மறைமுகமாக நிறைய காரியங்களை செய்து வருகிறார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருந்தாலும் தனுஷ் தன்னுடைய எல்லா நண்பர்களுக்கும் லால் சலாம் படத்தை பார்ப்பதற்காக டிக்கெட் வாங்கி கொடுத்திருக்கிறார்.

Also Read: சலாம் போட வைத்தாரா மொய்தீன் பாய்.? அனல் பறக்கும் லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு மறைமுகமாக உதவி செய்யும் தனுஷ்

அதுவும் தனுஷ், 200 டிக்கெட்டுக்கு மேலாகவே வாங்கி கொடுத்திருக்கிறார். அதை தவிர அவரும் லால் சலாம் படத்தின் FDFS ஷோ-வை பார்த்து விட்டார். அது மட்டுமல்ல அவருடைய எக்ஸ் தளத்திலும் லால் சலாம் படத்தினை ப்ரோமொட் செய்து வருகிறார். என்னதான் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவரின் பாசமும் குறையாமல் இருக்கிறது.

னைவியின் மீது இருக்கும் பாசத்தை விட்டுக் கொடுக்காத தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமாவில் ஜெயிக்கணும் என்றே அவருடைய படத்தின் வெற்றிக்காக மறைமுகமாக நிறைய வேலைகளை பார்க்கிறார். இவ்வளவு லவ்வுடன் இருக்கக்கூடிய தனுஷ், சீக்கிரம் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் மகன்களுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.

Also Read: மகளைப் பார்த்து பூரித்துப் போய் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு.. லால் சலாம் வெற்றி பெறுமா.?

Trending News