Dhanush: நடிகர் தனுஷ் அருண் விஜயை தொடர்ந்து மீண்டும் அஜித் பட வில்லன் ஒருவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார்.
தனுஷ் தற்போது அவருடைய அமராவதி மற்றும் கலாட்டா கல்யாணம் படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய் உடன் இன்னொரு பாலிவுட் படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக மும்பையின் ஒரு கல்லூரியில் நடைபெற்று வருகிறது. மேலும் இவர் நடித்த இட்லி கடை படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அஜித் பட வில்லனை லாக் செய்த தனுஷ்
இந்த படத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் விக்டர் என்ற கேரக்டரில் சம்பவம் செய்த அருண் விஜய் இணைந்து இருக்கிறார்.
இதை தொடர்ந்து தனுஷின் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது.
இந்த நிலையில் போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, லப்பர் பந்து படத்தை இயக்கிய தமிழரசன் பச்சை முத்து ஆகியோருடன் படம் பண்ண இருக்கிறார்.
இதில் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் இணைய போகும் படத்திற்கு ஆர்டிஸ்ட் தேர்வுகள் நடைபெற்று வருகிறதாம்.
இதில் வில்லன் கேரக்டரில் நடிக்க நடிகர் அர்ஜுனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஏற்கனவே அஜித்தின் மங்காத்தா மற்றும் விடாமுயற்சி படங்களில் நடித்திருந்தார். மேலும் விஜயின் லியோ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.