வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தனுசை வளர்த்துவிட அவர் அப்பா செய்த சூழ்ச்சி.. அப்பட்டமாய் கசிந்த தகவல்!

தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் தனுஷ். இன்று அவர் சினிமாவில் இவ்வளவு உயரத்தை அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அவருடைய அப்பா கஸ்தூரி ராஜா.

அவர் தமிழில் என் ராசாவின் மனசிலே, கரிசகாட்டுபூவே உள்ளிட்ட பல கிராமத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் அவர் தன் மகன் தனுஷை அறிமுகப்படுத்திய திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த திரைப்படத்தை கஸ்தூரி ராஜாவின் மகன் இயக்குனர் செல்வராகவன் இயக்கினார்.

மேலும் இப்படத்தின் கதை, இயக்கம் போன்ற அனைத்தையும் செல்வராகவன் தான் செய்திருந்தார். ஆனால் டைட்டில் கார்டில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் பெயர் தான் இடம் பெற்றிருக்கும். மகன் எடுத்து முடித்த திரைப்படத்தை அவர் பெயரில் ஏன் வெளியிட்டார் என்று அனைவருக்கும் ஒரு குழப்பம் இருந்தது.

அங்குதான் கஸ்தூரிராஜாவின் ஒரு மாஸ்டர் பிளானை நாம் கவனிக்க வேண்டும். அதாவது துள்ளுவதோ இளமை திரைப்படம் வெளியாகும் பொழுது செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் நமக்கு முகம் தெரியாத நபர்கள். இதனால் இந்த படத்துக்கு செல்வராகவன் பெயரை வைத்தால் வியாபாரம் ஆகாது.

எனவேதான் கஸ்தூரி ராஜா தன்னுடைய பெயரை டைட்டில் கார்டில் போட்டு படத்தை வெளியிட்டார். அதன் பிறகு படத்தை பற்றி பல ப்ரோமோஷன்களை அவர் செய்தார். இதனால் ஆரம்பத்தில் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் போகப்போக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு அவர்கள் இருவரின் வாழ்க்கையும் சினிமாவில் எங்கேயோ சென்றுவிட்டது.

அதில் தனுஷ் தற்போது சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அன்று கஸ்தூரி ராஜா போட்ட அந்த பலே திட்டம் தான். இதுவரை யாருக்கும் தெரியாத இந்த தகவல் தற்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Trending News