வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அந்த பெண் மீது என்னதான் கோபம்னு தெரியல.. தனுஷ் செய்யும் படுபாதக செயல்

தனுஷ் இப்பொழுது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் இந்தப் படம் அவருக்கு ஒரு நல்ல பிரேக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், சமீபத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் லுக்கையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இயக்குனரான செல்வராகவனுன் இந்த படத்தில் நடித்திருக்கிறார் .

இந்நிலையில் செல்வரகவன் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் உடன் நடித்த ‘சாணி காகிதம்’ படம் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், அந்தப் படத்தில் வேலை செய்த ஒளிப்பதிவாளர் யாமினி எல்லாரையும் கவர்ந்து விட்டார். இதனால் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரிசையாக கொண்டிருக்கிறார்.

ஆனால் யாமினி தற்போது, ‘செல்வராகவன் மற்றும் நானே வருவேன் படக்குழுவுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம் என்றும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன்’ என்ற அறிவிப்பை வெளியிட்ட இந்தப் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இவர் இப்படி சொன்னதற்கு தனுஷ் தன் காரணம்.

யாமினியின் இந்த முடிவுக்கு காரணம் என்னவென்றால், சாணி காகிதத்தில் யாமினியின் வேலை பிடித்துப்போக செல்வராகவன் இயக்கிய கூடிய நானே வருவேன் படத்திலும் அவரை ஒளிப்பதிவாளராக அமர்த்தி விட்டார் செல்வராகவன். ஆனால் இரண்டு நாட்கள் சூட்டிலேயே தனுஷுடன் ஏற்பட்ட மோதலில் அண்ணனிடம் சண்டை என்று யாமினி படத்திலிருந்து தூக்கி விட்டார் தனுஷ்.

இப்பொழுது இதை பற்றி ஏதும் தெரியாமல் தனுஷை வைத்து அடுத்த படம் இயக்கும் அருண் மாதேஸ்வரன், இந்தப் படத்திலும் ஒளிப்பதிவாளராக யாமினி பணியாற்றியதை பார்த்த தனுஷ் கோபம் தலைக்கேறி, அதிலிருந்தும் யாமினியை தனுஷ் துரத்தி விட்டாராம். தனுஷ் தன்னுடைய அண்ணன் மேல் இருக்கும் கோபத்தை யாமினி மேல் காட்டுவது சரி இல்ல என படக்குழுவினர் முணுமுணுக்கின்றனர்.

Trending News