வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

41 வயதில் ரத்தினவேலின் சொத்து மதிப்பு.. மாமன்னால் எகிரிய பகத் பாசிலின் மார்க்கெட்

Fahadh Fasil: மாமன்னன் படத்தின் மூலம் புதிய ட்ரெண்டை உருவாக்கியவர் தான் பகத் பாசில். மலையாளத்தில் பிரபல நடிகரான இவர் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். வித்யாசமான அறிவுப்பூர்வ வில்லனாக இந்த படத்தில் அனைவரையும் மிரள செய்திருந்தார் பகத் பாசில்.

அதன்பிறகு இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்த படம் தான் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம். ஏஜென்ட் அமராக அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருந்தார். ஆனால் இந்த படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ரத்தினவேலாக நடித்து அசத்தி இருந்தார்.

Also Read : தோல்வியை ஒத்துக்கொண்ட பகத் பாசில்.. சரியான நெத்தியடி கொடுத்து வெளியிட்ட புகைப்படம்

அதாவது ஒரு படத்தில் ஹீரோவை காட்டிலும் ரசிகர்கள் வில்லனை கொண்டாடினார்கள் என்றால் அது மாமன்னன் படத்திற்கு தான் என்று கூறலாம். ஒவ்வொருவரும் தங்களுக்கான அடையாளமாக மாமன்னன் ரத்னவேலின் புகைப்படத்தை இணையத்தில் ட்ரெண்ட் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் இப்படத்தில் வடிவேலு மற்றும் உதயநிதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

அவர்களையே பகத் பாசில் ஓரம் கட்டி விட்டார். இந்த சூழலில் தற்போது 41 வயதாகும் பகத் பாசிலின் சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகையான நஸ்ரியாவை பகத் பாசில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மலையாள சினிமாவில் தனது தந்தை அறிமுகத்தால் படத்தில் நடித்த இவருக்கு கேலி, கிண்டல் தான் வந்துள்ளது.

Also Read : ஏற்கனவே தளபதியுடன் நடித்துள்ள மாமன்னன் ரத்தினவேல்.. 2ம் முறையாக லோகேஷ் வைத்துள்ள டிவிஸ்ட்

இதனால் சினிமாவே வேண்டாம் என்று ஓரம்கட்டி இருந்த பகத் பாசிலுக்கு ஏழு வருடம் கழித்து மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது திறமை மூலம் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பகத் பாசில் ஒரு படத்திற்கு 5 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.

அதன்படி தற்போது பகத் பாசிலின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 50 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் கடந்த இரண்டு வருடங்களில் தான் இவர் அதிகமாக சொத்து சேர்த்துள்ளாராம். இப்போது அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் சம்பளமும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் பகத் பாசிலுக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறதாம்.

Also Read : மாமன்னன் கதையை கவுண்டமணி 2 நிமிஷ காமெடியிலேயே சொல்லிட்டாரு.. அப்போவே டஃப் கொடுத்த நக்கல் மன்னன்

Trending News