Gemini Ganesan: தமிழ் சினிமாவில் 1960 காலகட்டத்தில் பயங்கர வைரலாக இருந்த ஹீரோக்களில் ஒருவர் ஜெமினி கணேசன். இவர் அப்போது நடித்த காதல் திரைப்படங்களில் நடித்த நடிப்பை பார்த்து அனைவரும் இவருக்கு “காதல் மன்னன்” என்று பட்டம் கொடுக்கும் அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார். அப்போது இருந்த இளசுகளின் கனவு கண்ணனாகவே இருந்தவர். இப்படி அப்பவே இவருக்கு பேர் வாங்கி கொடுத் 5 திரைப்படங்கள் பார்ப்போம்.
கல்யாண பரிசு: இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி கூட்டணியில் 1959இல் வெளியான திரைப்படம் கல்யாண பரிசு. இது ஒரு ரொமான்டிக் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் பாஸ்கராக தனது காதல் லீலைகளை அதைத்தும் வெளிக்கொண்டு வந்திருப்பார். வசந்தி, கீதா என்னும் இரண்டு பெண்களை காதலித்து காதல் மன்னனாக வலம் வந்திருப்பார்.
Also Read:ரவீந்தர், மகாலட்சுமி காதலை அம்பலப்படுத்திய பயில்வான்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட கேவலம்
நான் அவன் இல்லை: பாலச்சந்தர் இயக்கத்தில் ௧௯௭௪ல் ஜே வெளிவந்த நான் அவன் இல்லை திரைப்படத்திலும் ஜெமினி கணேசனின் லீலைகள் தொடர்ந்தது. திரைப்படத்தில் லட்சுமி, ஜெயசுதா, ஜெயபாரதி, வரலட்சுமி போன்றவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் பல மொழிகள் பேசும் நபராகவும், பல பெண்களுடன் வேறு வேடங்களில் தொடர்பு கொண்டு பழகிக்கொண்டு, அப்போவே மன்மத லீலை புரிந்து விளையாடியவர் தான் தலைவர் ஜெமினி கணேசன்.
மனம்போல் மாங்கல்யம்: 1953 இல் வெளியான மனம் போல் மாங்கல்யம் திரைப்படம் ஜெமினி கணேசன் சாவித்திரி கூட்டணியில் வெளிவந்தது . திரைப்படத்திலும் வழக்கம் போல் தனது காதல் லீலைகளை தொடர்ந்து விளையாடியிருப்பார்.இது ஒரு காமெடி கலந்த காதல் திரைப்படம் ஆகும். இதில் சரம் கணபதி , சந்தான லட்சுமி, பால, சரஸ்வதி போன்றோர் நடித்துள்ளனர்.
கற்பகம்: கோ பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1963இல் வெளிவந்த கற்பகம் திரைப்படம் ஜெமினி கணேசன், கே ஆர் விஜயா, ஹலோ, சீலா தேவி, சாவித்திரி போன்றோர் இணைந்து நடித்துள்ளனர். திரைப்படத்திலும் இவரது காதல் லீலைகள் தொடர்ந்தன. இந்த படம் 100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது . நிறைய வசூலையும் குவித்தது, இதனாலே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.
அவளுக்கென்று ஒரு மனம்: இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 1971இல் வெளிவந்த அவளுக்கு என்று ஒரு மனம் திரைப்படத்திலும் தலைவரது வேலையை பார்க்க முடியும். திரைப்படத்தில் லலிதா மற்றும் மீனா இருவரும் கண்ணனான ஜெமினி கணேசனை காதல் செய்வார்கள். இவரும் தனது மன்மத லீலையை திரைப்படத்திலும் வெளிப்படுத்தி இருப்பார். ஆனா நான் அப்படிலாம் கிடையாது, காதல் மன்னன் எல்லாம் இல்லை என வேஷம் போடுவார்.