வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

ஜெமினியின் காதல் லீலையில் வெளிவந்த 5 படங்கள்.. 70-திலும் அவ்வை சண்முகியுடன் மலர்ந்த காதல்

கோலிவுட்டில் காதல் மன்னன் என்ற பெயர் வந்ததே நடிகர் ஜெமினி கணேசனால் தான். நடிகர் திலகம், மக்கள் திலகம் இருந்தாலும் இந்த காதல் மன்னனுக்கு 60, 70 களில் பெண் ரசிகைகள் அதிகம் உண்டு. சினிமா மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் இவர் காதல் மன்னன் தான். ஜெமினி கணேசன் தன்னுடைய வாழ்நாளில் ஆக்சன் படங்களில் நடித்ததெல்லாம் மிகவும் குறைவே. இவருடைய படங்களில் காதலுக்கு பஞ்சமே இருக்காது.

கல்யாண பரிசு: ஜெமினி கணேசனின் நடிப்பில் 1959 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கல்யாண பரிசு. இதில் விஜயகுமாரி மற்றும் சரோஜா தேவி ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீதர் தயாரித்திருந்தார். கல்யாண பரிசு படத்தில் வரும் ‘உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட’ பாடல் அன்றைய காதலர்களின் தேசிய கீதமாக இருந்தது.

Also Read: சொந்த வாழ்க்கை, சினிமா இரண்டிலுமே சக்கை போடு போட்ட ஜெமினி கணேசன்.. காதல் மன்னன் என்று பெயர் வர இதுதான் காரணம்

தேன்நிலவு: ஜெமினி கணேசனும், வைஜெயந்தி மாலாவும் இணைந்து நடித்த தேனிலவு திரைப்படம் ரொமான்டிக் நிறைந்த காதல் திரைப்படம். முதன் முதலில் ஜம்மு காஷ்மீரில் எடுக்கப்பட்ட தென்னிந்திய திரைப்படம் தேனிலவு ஆகும். இந்த படம் நடிகர் ஜெமினி கணேசனுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்த வெற்றி திரைப்படம்.

மணமாலை: பரினீதா என்னும் நாவலை தழுவி வந்த திரைப்படம் மணமாலை. இந்த படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக அவருடைய காதல் மனைவி சாவித்திரி நடித்திருந்தார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் நாராயண மூர்த்தி இயக்கி இருந்தார். சந்திரபாபுவின் நகைச்சுவையோடு உருவான இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது.

Also Read: சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென கிஸ் அடித்த நடிகர்.. கதறி அழுத ஜெமினி கணேசனின் மகள்

வஞ்சிக்கோட்டை வாலிபன்: இயக்குனர் எஸ் எஸ் வாசன் இயக்கத்தில், ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வஞ்சிக்கோட்டை வாலிபன். இந்த படத்தில் ஜெமினி கணேசனோடு இணைந்து வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் போட்டி போட்டு நடித்திருந்தனர். இந்த படத்தில் வரும் ‘கண்ணும் கண்ணும் கலந்து’ பாடலுக்கு வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் ஆடியது இன்றுவரை பேசப்படுகிறது.

அவ்வை சண்முகி: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கமலஹாசன், மீனா, நாகேஷ், நாசர், ஜெமினி கணேசன் நடித்த திரைப்படம் அவ்வை சண்முகி. இந்த படத்தில் அவ்வை சண்முகியாக வரும் கமலை, ஜெமினி கணேசன் உருகி உருகி ஒருதலையாக காதலிப்பது நீண்ட வருடங்களுக்கு பின் 60 களில் இருந்த காதல் மன்னனை ரசிகர்களுக்கு நினைவுவூட்டியது.

Also Read: ஜெமினி மறைத்த அந்த ரகசியம்.. திருமணத்திற்குப் பின் வெளிவந்த உண்மை

Trending News