புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வடிவேலு எண்ட்ரியால் காண்டான கவுண்டமணி.. நெஞ்சிலேயே மிதித்து விரட்டிய சம்பவம்

கோலிவுட் சினிமாவின் மிகப்பெரிய காமெடி ஜாம்பவானாக இருந்தவர் வைகை புயல் வடிவேலு. சமீப காலமாக இவருக்கு வெற்றி படங்கள் எதுவும் இல்லை என்றாலும் இன்றைய இளசுகள் வரை இவருடைய காமெடி காட்சிகளை கொண்டாடி வருகின்றனர். இவருடைய காமெடி டெம்ப்லேட்டுகள் இல்லாமல் சமூக வலைத்தளமே தமிழ்நாட்டில் இயங்காது என்று கூட சொல்லலாம்.

வடிவேலுக்கு முதன் முதலில் சினிமா வாய்ப்பை கொடுத்தவர் என்றால் அது ராஜ்கிரண் தான். 1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண், மீனா நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் வடிவேலுக்காக வேறு வழியே இல்லாமல் ஒரே ஒரு காட்சியை கொடுத்திருப்பார் நடிகர் ராஜ்கிரண். மேலும் வடிவேலு இந்த படத்தில் ஒரு பாடலும் பாடியிருப்பார்.

Also Read: டாக்டர் பட்டமா.? கொடுங்க.. வடிவேலுவை போல போலியாக பல்லை காட்டி வந்து அசிங்கப்பட்ட 8 பிரபலங்கள்

இதை கவனித்த அன்றைய காமெடி ஜாம்பவான் கவுண்டமணி வடிவேலுவை அந்த படத்தில் அறிமுகப்படுத்தியதற்காக ராஜ்கிரணை கடிந்து கொண்டாராம். அவன் அவன் சென்னையில் டீ குடிக்க கூட காசு இல்லாமல் சினிமா வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும்போது நீ இப்படி மதுரையில் இருந்து ஆளை கூட்டிக்கொண்டு வருவது சரிதானா?, அவனை முதலில் வெளிய அனுப்பு என்று ராஜ்கிரணிடம் சொல்லி இருக்கிறார் கவுண்டமணி.

அதற்கு நடிகர் ராஜ்கிரண் கோச்சுக்காதீங்க அண்ணே இந்த ஒரு காட்சியில் மட்டும் நடிக்கட்டும் பிறகு நான் மதுரைக்கு அனுப்பி விடுகிறேன் என்று சொன்னாராம். கவுண்டமணியும் சமாதானம் ஆனது போல் காட்டிக்கொண்டாராம். அடுத்த காட்சியே கவுண்டமணி வடிவேலுவை எட்டி உதைப்பது போல் அமைக்கப்பட்டிருந்தது. கவுண்டமணி உண்மையிலேயே வடிவேலுவை கோபத்துடன் நீ எல்லாம் நடிக்க வருவியா என்று கேட்டு நெஞ்சிலேயே மிதித்திருக்கிறார்.

Also Read: 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.. பெரிய மனுஷன் பண்ற வேலையா! முகம் சுளிக்க வைத்த புகைப்படம்

காட்சி படமாக்கப்பட்டதும் வலி தாங்க முடியாத வடிவேலு நடிகர் சிசர் மனோகரிடம் ரொம்ப வலிக்கிறது அண்ணே என்று சொல்லி அழுது இருக்கிறார். அப்போது சிசர் மனோகர் நீ இப்பொழுது உண்மையாகவே அடி வாங்கி இருக்கிறாய். நிச்சயமாக சினிமாவில் ஒருநாள் ஜெயிப்பாய் என்று வடிவேலுவை ஊக்கப்படுத்தி சமாதானப்படுத்தி இருக்கிறார்.

சிசர் மனோகர் அந்த நேரத்தில் வடிவேலுக்கு பல விதங்களில் உதவியதாக சொல்லி இருக்கிறார். ஆனால் இவர்கள் இருவருக்கும் பகவதி திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய பிரச்சனை நடந்து இருக்கிறது. இதனால் வடிவேலு நடிகர் சிசர் மனோகருக்கு வரவேண்டிய நிறைய வாய்ப்புகளை தட்டி பறித்ததாக தற்போது வடிவேலு மீது குற்றம் சாட்டியிருக்கிறார் அந்த நடிகர்.

Also Read: உங்க பருப்பு இங்க வேகாது.. விவேக், வடிவேலு ரெண்டு பேருக்கும் தண்ணி காட்டிய நடிகர்

Trending News