ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

திருமணமான நடிகரை வளைக்க முயன்ற நடிகை.. மாஸ் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதால் வந்த வினை

வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு திரை உலகில் காலடி வைத்தவர் தான் அந்த நடிகை. நடிக்க வந்த வேகத்திலேயே அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இதனால் தமிழ் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் அவர் வெகு பிரபலமானார்.

இப்படி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நடிகைக்கு திடீரென ஏற்பட்ட காதல் தான் அவருடைய சினிமா வாழ்வையே ஆட்டம் காண வைத்தது. தன்னுடன் நடித்த அந்த மாஸ் நடிகரை உருகி உருகி காதலித்த நடிகை அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு வெறியுடன் இருந்தார்.

Also read: 5 வருட லிவிங் டுகெதர், மதமாற்றம்.. புது நடிகையின் மோகத்தால் புளித்துப்போன கர்ப்பிணி மனைவி

இத்தனைக்கும் அந்த நடிகருக்கு திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறது. நடிகரும் சாதாரண ஆள் கிடையாது பெரிய இடத்தில் வாக்கப்பட்டாலும் ரகசியமாக திரைமறைவு லீலைகளையும் செய்து கொண்டுதான் இருந்தார். அதனால் இந்த வாரிசு நடிகையுடன் அவர் படு நெருக்கம் காட்டினார்.

இதை தெரிந்து கொண்ட நடிகரின் மனைவி அதை மிகப்பெரிய பஞ்சாயத்தாக மாற்றியதால் வாரிசு நடிகை சினிமாவை விட்டு ஒதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் அவர் தலையை காட்டினாலும் பெரிய அளவில் அந்த திரைப்படங்கள் ஓடவில்லை.

Also read: நடிகையுடன் ஜாலி ரைடு போன நடிகர்.. பஞ்சாயத்தை கூட்டி பொங்கிய மனைவி

அதனால் அவரை யாரும் படங்களில் புக் செய்ய முன்வரவில்லை. இருந்தாலும் நடிகை தன்னுடைய போக்கில் வாழ்ந்து வந்தார். இதற்கு இடையில் நடிகைக்கு மற்றொரு காதலும் துளிர் விட்டது. ஆனால் அதுவும் நிலைக்கவில்லை. பிறகு கிடைத்த படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை மீண்டும் காதலில் விழுந்தார்.

நடிகையின் ராசியோ என்னவோ இந்த காதலும் பாதியிலேயே புட்டுக் கொண்டது. இப்படி அடுத்தடுத்த காதல் தோல்விகளால் துவண்டு போன அந்த நடிகை தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். எப்போதாவது இந்தியா வந்தாலும் தமிழ்நாட்டு பக்கமே போக கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம் அந்த நடிகை. அந்த அளவுக்கு அவருடைய காதல் தோல்வி அவரை படாத பாடு படுத்தி வருகிறது.

Also read: 5 வருட லிவிங் டுகெதர், மதமாற்றம்.. புது நடிகையின் மோகத்தால் புளித்துப்போன கர்ப்பிணி மனைவி

Trending News