வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த ஜீவா.. இவ்வளவு பெரிய சான்ஸ் மிஸ் ஆயிடுச்சு

தமிழ் சினிமாவில் அனைவராலும் நன்கு அறியப்படுபவர் நடிகர். இவர் நடிப்பில் வெளியான ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, நண்பன் போன்ற படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது தொடர்ந்து பல படங்களில் ஜீவா நடித்து வருகிறார்.

இவருடைய படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்து இருக்கும். இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிக்க இருந்த வாய்ப்பை ஜீவா தவறவிட்டுள்ளார். பிஜாய் நம்பியார் இயக்கத்தில் 2013ல் வெளியான டேவிட் படத்தில் விக்ரமும், ஜீவாவும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

ஆனால் இப்படத்திற்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் ஜீவா நடிப்பதாக இருந்துள்ளது. விக்ரமின் ஐம்பதாவது படமான ஐ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் விக்ரமுக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும் விக்ரமுடன் எமி ஜாக்சன், சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். ஐ படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது.

இதில் ஜானி என்ற மாடல் கதாபாத்திரத்தில் உபேன் பட்டேல் நடித்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தில் தான் ஜீவா நடிப்பதாக இருந்தது. அப்போது ஜீவா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஐ படத்தில் நடிக்க முடியாமல் போனது.

மேலும் ஜீவா இவ்வளவு பெரிய சான்ஸை மிஸ் ஆயிடுச்சு என்று தற்போது வரை கவலைப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜீவா 83 என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கபில்தேவ் ஆக ரன்வீர்சிங்கும், ஸ்ரீகாந்த் ஆக ஜீவாவும் நடித்துள்ளார்கள். தற்போது சிவா மற்றும் ஜீவா இணைந்து கோல்மால் திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

Trending News