வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கவுண்டமணியை வெறுத்து ஒதுக்கிய உலகநாயகன்.. இருவரின் விரிசலுக்கு இதுதான் காரணம்

நகைச்சுவை மன்னன் கவுண்டமணி எண்பது மட்டும் 90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவை தன்னுடைய காமெடியால் ஆண்டு வந்தார். இவருடைய காமெடிக்காகவே நிறைய படங்கள் வெற்றி பெற்றன. மேலும் அந்த காலத்தில் அவருடன் நடித்த நிறைய ஹீரோக்களை விட அதிகமாக சம்பளத்தை இவர் வாங்கினார். அந்த அளவுக்கு பேரும், புகழோடும் இருந்தார்.

கவுண்டமணியின் காமெடி வசனங்கள் இரட்டை அர்த்தங்களுடன் இருக்கிறது, உருவ கேலி செய்வது போல் இருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்தாலும், அவருடைய காமெடிகளை ரசிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். படங்களில் எப்படி டைமிங்கில் கவுண்டர் அடிக்கிறாரோ அதேபோன்றுதான் படப்பிடிப்பு தளத்திலும் இருப்பாராம். இதை பல சினிமா கலைஞர்கள் தங்களுடைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.

Also Read:ஒரு கல்லுல ரெண்டு மாங்காவை அடிக்க நினைக்கும் சிவகார்த்திகேயன்.. கமலை வைத்து கல்லா கட்ட திட்டம்

கோலிவுட் சினிமாவில் கவுண்டமணிக்கு என்று தனியாக குரூப் இருந்திருக்கிறது. சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் இணைந்து கவுண்டமணி படம் பண்ணும் பொழுது ரொம்பவும் சுதந்திரமாக அவர்களை கலாய்ப்பார். இதை அவர்களே ரசிப்பார்கள். படப்பிடிப்பு தளத்திலும் எப்போதுமே கலகலப்பாக பேசிக்கொண்டு இருப்பார்களாம்.

இவருடைய இந்த கூட்டணியில் இல்லாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு கூட காமெடி காட்சிகளின் போது அவர் அடிக்கும் கவுண்டருக்கு தங்களை மறந்து சிரித்து விடுவார்கள். இதில் உலக நாயகன் கமலஹாசன் மட்டும் சற்று மாறுபட்டவர். அவருக்கு கவுண்டமணி படிப்பிடிப்பு தளத்தில் கவுண்டர் அடிப்பது மற்றும் படகாட்சியின் போது எதிர்பாராத விதமாக கவுண்டர் அடிப்பது போன்றவை சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டதாம்.

Also Read:இந்த ஒரு விஷயத்தில் கமலுக்கு எதிர் துருவத்தில் இருக்கும் அஜித்.. முதலாளி ஆக ஆசைப்படாத மனுஷன்

மேலும் கவுண்டமணிக்கு சக நடிகர்களை ஒருமையில் பேசும் பழக்கமும் இருந்திருக்கிறது. இதுவும் கமலுக்கு சுத்தமாக செட் ஆகவில்லை. இதனாலேயே கமலுக்கு, கவுண்டமணியை பிடிக்காமல் போய்விட்டதாம். பெரும்பாலும் தன்னுடைய படங்களில் கவுண்டமணி நடிப்பதை தவிர்த்து வந்திருக்கிறார் கமலஹாசன். இந்தியன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவதே இல்லையாம்.

ஆனால் கவுண்டமணி இதற்கெல்லாம் வருத்தப்படவே இல்லையாம். ஏனென்றால் அந்த காலத்திலேயே அவர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கி இருந்திருக்கிறார். படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணிக்கு கமல் தன்னை ஒதுக்குவது என்பது மிகப்பெரிய விஷயமாக தெரியவில்லை. அடுத்தடுத்து பட சூட்டிங் பயங்கர பிசியாக நடித்து பெயர் வாங்கிக் கொண்டிருந்தார் அவர்.

Also Read:நடிகர் திலகத்தை தேசிய விருது வாங்காமல் தடுத்த உலகநாயகன்.. காரணத்தை கூறி நெகிழ வைத்த சம்பவம்

Trending News