செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Star Movie Review: நடிப்பின் மீது தீரா காதல், கவினின் ஸ்டார் ஜொலித்ததா.? படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Star Movie Review: இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்டார் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர், ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து கவின் செய்த பிரமோஷனும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. தற்போது ஸ்டார் ரசிகர்கள் மத்தியில் ஜொலித்ததா? அல்லது டல்லடித்ததா? என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.

ஸ்டார் விமர்சனம்

ட்ரெய்லரை பார்க்கும்போது படம் என்ன மாதிரியான கதை என்பது தெரிந்திருந்தது. அதன்படி சிறு வயதிலிருந்து நடிகனாகும் கனவில் இருக்கும் கவின் அதற்காக கடும் முயற்சி எடுக்கிறார்.

அவருக்கு பக்க பலமாக அப்பா லால் துணை நிற்கிறார். இந்த முயற்சிக்கு கிடையில் வாய்ப்பு கைகூடி வரும்போது கவினுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அதனால் அவருடைய வாழ்க்கையும் தடம் புரளுகிறது.

அதைத் தாண்டி கவின் ஜெயித்தாரா? நடிகனாக அந்தஸ்து கிடைத்ததா? என்பது தான் படத்தின் கதை. கேட்பதற்கு கதை சாதாரணமாக இருந்தாலும் அதற்காக கவின் கொடுத்துள்ள அர்ப்பணிப்பு பாராட்ட வைத்துள்ளது.

படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் அவர் அனைவரையும் கவர்ந்துள்ளார். அதிலும் தன் கனவை அடைய அவர் சந்திக்கும் வலிகளும், பிரச்சனைகளும் தத்ரூபமாக இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக 90 கால கட்டத்திலிருந்து நகரும் கதைக்கேற்ப ஒவ்வொரு விஷயங்களையும் இயக்குனர் கவனமாக கையாண்டுள்ளார். அதற்கடுத்து யுவனின் இசை படத்தை தாங்கி பிடித்துள்ளது.

மேலும் சினிமா ஒரு நடிகனை உச்சாணி கொம்புக்கும் அழைத்துச் செல்லும் அதே சமயம் கீழே இறக்கியும் விடும். அதை ஒரு நடிகரின் ரியல் அனுபவத்தை வைத்து இயக்குனர் காட்டியிருப்பது சிறப்பு.

அதே போன்று கிளைமாக்ஸ் காட்சியில் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று இருக்கிறது. அத்துடன் சேர்த்து நாம் எதிர்பார்க்காத இன்னும் இரண்டு சர்ப்ரைஸ்களும் இருக்கிறது.

இப்படியாக நகரும் கதையில் சிறு சிறு மைனஸ் விஷயங்களும் உள்ளது. அதில் இடையிடையே ஹீரோயின்கள் வரும் காட்சிகள் வேகத்தை குறைக்கிறது.

அதேபோல் நடிகனாக கவினின் போராட்டத்தை இயக்குனர் இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டி இருக்கலாம். இருப்பினும் இந்த ஸ்டார் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் சிறப்பாக இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

Trending News