மார்ச் 28, இந்த தேதியை குறிவைத்து மூன்று படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது. அதில் இரண்டு பெரிய படங்களும் அடங்கும். கவின் நடிப்பில் உருவாகி வரும் கிஸ் படத்தையும் இந்த தேதியில் தான் ரிலீஸ் செய்ய திட்டம் போட்டுள்ளனர். ஆனால் திடீரென இரண்டு பெரிய படங்கள் இந்த தேதியை குறி வைத்ததால் கவினுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சமீபகாலமாக சறுக்கல்களை சந்தித்து வந்த விக்ரம் அருண்குமார் இயக்கத்தில் வீரதீர சூரன் படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் இன்னும் விற்பனையாகவில்லை அதனால் ஏற்கனவே ரிலீஸ் ஆக இருந்த இந்த படம் இப்பொழுது மார்ச் மாதம் தள்ளிப் போய் உள்ளது.
மற்றொரு பான் இந்தியா படமான பவன் கல்யாண் நடிப்பில் வெளிவர உள்ள ஹர ஹர வீர மல்லு படமும் மார்ச் 28 ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் தமிழிலும் வெளிவர உள்ளது. கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த இரண்டு படங்களுடன் கவின் படம் கிஸ் மோதுகிறது.
பெரிய படங்களுக்கு தான் தியேட்டர்கள் கிடைக்கும் என்பதால் கிஸ் படத்தின் நிலைமை என்னவாகும் என்று தெரியவில்லை. ஆனால் கவின் படத்திற்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இந்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் திட்டமிட்டபடி கவின் படம் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறி தான்.
ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதால் வீரதீர சூரன் படத்தை எப்படியும் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர்.ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அதனால் கூடிய விரைவில் இதை வெளியிடுவதற்கு ஏற்பாடு நடந்து வருகிறது.