Actor Kavin: சின்னத்திரை மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற கவின் இப்போது சினிமாவில் ஒரு ஹீரோவாக தன் திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய லிப்ட் படம் அதிக கவனம் பெற்ற நிலையில் சமீபத்தில் வெளியான டாடா படம் இவருக்கான வெற்றியை தேடி கொடுத்தது.
அதைத்தொடர்ந்து வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் பிசியாகி வரும் கவின் தற்போது திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். அந்த வகையில் தன்னுடைய நீண்ட நாள் காதலியான மோனிகாவை அவர் கரம் பிடித்துள்ளார்.
Also read: லாஸ்லியாவுக்கும் கவினின் வருங்கால மனைவிக்கும் இப்படி ஒரு தொடர்பா.? சந்தேகத்தை தீர்த்து புகைப்படம்
இவருக்கு இப்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாகவே கவினுடைய திருமணம் பற்றி பல செய்திகள் வெளியானது. ஆனாலும் கவின் தரப்பில் இருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் கவின்

இந்நிலையில் இன்று அவருடைய திருமண புகைப்படங்களை பார்த்த பலரும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி புகழ் தற்போது கவினின் திருமணத்திற்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Also read: பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்
அந்த போட்டோ தான் இப்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அதில் கவின் மற்றும் அவருடைய மனைவி இருவரும் திருமணம் நடந்த பூரிப்பில் மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் சந்தோஷத்துடன் நிற்கின்றனர்.
கவினின் திருமணத்திற்கு நேரில் சென்ற புகழ்

தற்போது ஒரு சில போட்டோக்கள் மட்டும் வெளிவந்துள்ள நிலையில் அடுத்தடுத்த போட்டோக்களை காணவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அந்த வகையில் நீண்ட நாள் காதலியை தற்போது கரம் பிடித்திருக்கும் கவின் இதே போன்ற மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also read: 5வது படத்திலேயே கவினுக்கு இரண்டு ஹீரோயின்கள்.. பொறாமையில் பொங்கிய இளம் ஹீரோக்கள்