திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லாரன்ஸ்- ரஜினி போட்ட ஒப்பந்தம்.. மகள்களுக்காக ஆலமரம் போல் நிற்கும் தலைவர்

Actor Lawrence -Rajini deal: கோலிவுட்டின் டாப் ஸ்டார் ஆக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தை தொடர்ந்து இப்போது டிஜே ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒருபுறம் 73 வயதிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கும் ரஜினி, மறுபுறம் தன்னுடைய மகள்களையும் ஆலமரமாய் நின்று காக்கிறார்.

ரஜினியின் இரண்டு மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் படம் இயக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற முக்கியமான கேரக்டரில் ரஜினி நடித்து அந்தப் படத்தின் பிசினஸை வேற லெவலுக்கு கொண்டு சென்றார்.

இந்த படத்தை ரஜினி படமாகவே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போல் இப்போது சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ஒரு படத்தை இயக்குகிறார். அதுலயும் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கிறார். ரஜினி மட்டுமல்ல இதில் ராகவா லாரன்ஸும் ஒரு கெஸ்ட் ரோல் பண்றாராம்.

Also Read: சிவகார்த்திகேயன் ஆசையில் விழுந்த மண்.. ரஜினிக்கு வில்லனாக சிஷ்யனை லாக் செய்த லோகேஷ்

சிஷ்யனிடம் ஸ்டிட்டாக ஆர்டர் போட்ட ரஜினி

இதற்காக 20 நாள் கால்சீட் கொடுக்க வேண்டும் என்று ரஜினியே ராகவா லாரன்ஸிடம் ஆர்டர் போட்டு இருக்கிறார். குரு சொன்னா சிஷ்யன் தட்ட முடியுமா! ராகவா லாரன்ஸும் ஓகே சொல்லிவிட்டார். முன்பு அரசியலுக்கு வருவதாக சொன்ன ரஜினி, உடல் நலம் காரணம் காட்டி ஒதுங்கிவிட்டார். அதன்பின் சினிமாவிலும் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துவிட்டு ஓய்வெடுக்க இருக்கிறார்.

அதற்குள் தன்னுடைய இரண்டு மகள்களையும் எப்படியாவது டாப் இயக்குனர்கள் ஆக்கி விட வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான அத்துணை வேலைகளையும் சூப்பர் ஸ்டார் இறங்கிய செய்கிறாராம். ஏற்கனவே சௌந்தர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரை வைத்து கோச்சடையான், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கினார்.

இந்த ரெண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பின் எந்த படங்களிலும் பணியாற்றாமல் இருந்த சௌந்தர்யா, இப்போது மூன்றாவதாக ராகவா லாரன்ஸை வைத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இதில் ரஜினியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதால், சௌந்தர்யா ரஜினிகாந்த்-க்கு இந்த படம் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ஓவர் சந்தோஷத்தில் இருக்கும் ராகவா லாரன்ஸ்.. கல்லா நிரம்பியதால் சம்பவம் செய்யப் போகும் ஜிகர்தண்டா சீசர்

Trending News