சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

கொஞ்சம் கூட யோசிக்காமல் மாதவன் ஒதுக்கிய 5 ஹிட் படங்கள்.. உஷாராக டாப் இடத்தைப் பிடித்த சூர்யா

Surya – Maadhavan: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித்துக்கு பிறகு விக்ரம், மாதவன் என்று தான் இருந்தது. ஆனால் தற்போது மாதவன் கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் வரிசையில் கூட இல்லை. மாதவனின் இடத்தை சூர்யா சுலபமாக பிடித்து விட்டார். இதற்கு முக்கிய காரணம் மாதவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மிஸ் செய்த இந்த ஐந்து படங்கள் தான்.

கஜினி: தீனா மற்றும் ரமணா போன்ற வெற்றி படங்களை கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் அவருடைய அடுத்த படமான கஜினிக்கு முதலில் அனுகியது மாதவனை தான். மாதவனுக்கு படத்தின் இரண்டாவது பாதி கதையில் விருப்பமில்லாததால் கஜினி படத்தை ரிஜெக்ட் செய்து விட்டார். சூர்யா ஓகே சொல்லி நடித்த இந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

காக்க காக்க: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் மின்னலே படத்தில் நடித்திருந்தார். மீண்டும் காக்க காக்க படத்தில் மாதவனை நடிக்க வைக்க கௌதம் மேனன் அவரிடம் கதை சொல்லி இருந்தார். ஆனால் இது போன்ற ஆக்சன் படம் தனக்கு ஒத்து வராது என மாதவன் ரிஜெக்ட் செய்து விட்டார். சூர்யா நடித்து அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read:சூர்யா, கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ரஜினி, விஜய் எல்லாம் பின்னாடி தான்

ரமணா: நடிகர் மாதவன் ஏ ஆர் முருகதாஸின் கஜினி படத்தை மட்டும் ரிஜெக்ட் செய்யவில்லை. அவரின் சூப்பர் ஹிட் படமான ரமணாவையும் ரிஜெக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் யூகி சேது ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டரில் நடிக்க முருகதாஸ் முதலில் மாதவனை தான் கேட்டிருக்கிறார். ஆனால் மாதவன் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை.

நண்பன்: நண்பன் படம் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இது 3 இடியட் என்னும் இந்தி படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் மாதவன் நடித்திருப்பார். தமிழில் அதே கேரக்டரில் நடிக்க சங்கர் மாதவனை அணுகிய போது அவர் ரிஜெக்ட் செய்து விட்டார். நண்பன் படம் எடுக்கும் பொழுது தனக்கு 41 வயதாகி இருந்ததால், கல்லூரி மாணவனாக நடிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். அந்த கேரக்டரில் நடித்த ஸ்ரீகாந்த் நல்ல வரவேற்பு பெற்றார்.

7ஜி ரெயின்போ காலனி: 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களின் லிஸ்டில் 7 ஜி ரெயின்போ காலனி எப்போதும் இருக்கும். இயக்குனர் செல்வராகவனின் மாஸ்டர் படங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் மாதவனை தான் கேட்டிருக்கிறார்கள். தனக்கு கால்ஷீட் இல்லாத காரணத்தால் மாதவன் நடிக்க மறுத்துவிட்டார்.

Also Read:4 பிரம்மாண்ட இயக்குனர்களின் ட்ரீம் ப்ராஜெக்ட்டின் ஒரே ஹீரோ சூர்யா.. சிந்தாமல் சிதறாமல் அடிக்கும் ரோலக்ஸ்

- Advertisement -spot_img

Trending News