ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மாதவனை ஆரம்பத்தில் அசிங்கப்படுத்திய பிரபலம்.. கடைசில வச்சாரு பாரு ஆப்பு

2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்த நடிகர் மாதவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தற்போது முதல் முறையாக அவரே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘ராக்கெட்டரி’ நம்பி விளைவு. இந்த படம் வருகிற ஜூலை மாதம் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் திரையிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இன்னிலையில் மாதவனின் தொடக்க கால சினிமா பயணத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று தற்போது வைரலாக பேசப்படுகிறது. அதாவது மணிரத்னம் இயக்கத்தில் 2000 ஆண்டு வெளிவந்த அலைபாயுதே திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்ததால், அதே ஆண்டில் அந்தப் படத்திற்கு பிறகு என்னவளே படத்தில் நடித்தார்.

இப்படத்திற்கு பிறகு இன்னொரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்தார். அப்போது தயாரிப்பாளர் மாதவனை அசிங்கப்படுத்தி பேசியுள்ளார். மாதவனுக்கு அலைபாயுதே தான் ஹிட், அதன் பிறகு வெளியான என்னவளே படம் பெரிய அளவில் தோல்வி படமாக அமைந்தது.

அப்படி இருக்கும் போது அவருக்கு எப்படி பெரிய தொகை சம்பளமாக கொடுப்பது என தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட மாதவன், ‘என் நடிப்பிற்கும், என் அழகிற்கும் சம்பளம் கிடையாதா? என்னுடைய முந்தைய படத்தின் வெற்றியை வைத்து தான் எனக்கு சம்பளமா!’ என கோபமாக பேசி சென்றுள்ளார்.

ஆகையால், எப்படியாவது மற்றும் ஒரு ஹிட் படத்தை கொடுத்து, அவர்களது மூஞ்சியில் கரியைப் பூச வேண்டும் என்ற எண்ணத்தில், சரியான கதைக்களத்தை கொண்ட படத்திற்காக காத்திருந்த மாதவனுக்கு, 2002 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் வெளியான ரன் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இந்தப் படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்து, சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் மாதவனுக்கு பெற்றுத்தந்தது.

அதன்பின் மாதவனை அசிங்கப்படுத்திய அதே தயாரிப்பாளர், மீண்டும் இவரைத் தேடி படத்தில் நடிக்க கேட்டுள்ளார். அப்போது மாதவன் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் படி ஒரு பெரிய தொகையை கேட்டுள்ளார். பின்பு அப்படத்தின் தயாரிப்பாளர் மாதவனுக்கு பெரிய சம்பளம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்.

Trending News