வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கிழவனுக்கு பெண் தர முடியாது.. முனீஸ்காந்த் மாமனார் கல்யாணத்தில் போட்ட குண்டு

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்து “முண்டாசுப்பட்டி” என்னும் திரைப்படத்தின் மூலம் அதிக கவனம் பெற்றவர் நடிகர் முனீஸ் காந்த். அதை தொடர்ந்து அவர் தற்போது பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் காமெடியில் கலக்கி வரும் இவருக்கு வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. சினிமாவில் வில்லனாக அவருடைய ரோல்மாடல் நடிகர் நாசர் தான் என்பதை அவர் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தன் திருமண வாழ்வில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார்.

அதாவது அவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தேன்மொழி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பொதுவாக சினிமாக்காரர்கள் என்றால் பெண் வீட்டினர் சற்று யோசித்து தான் திருமணம் முடிவு செய்வார்கள். அதே போன்ற ஒரு நிகழ்வு முனீஸ்காந்த் திருமணத்திலும் நடந்துள்ளது.

அது என்னவென்றால் அவருக்கு திருமணம் முடிவு செய்ய இருந்த நிலையில் பெண் வீட்டினர் விக்கிபீடியாவில் முனீஸ்காந்துக்கு ஐம்பத்தி ஆறு வயது என்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பதறிப்போன அவர்கள் முனீஸ்காந்திடம் இது குறித்து கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் என்னை பார்த்தால் அவ்வளவு வயதானவன் போன்றா தெரிகிறது, இதோ என்னுடைய ஸ்கூல் சர்டிபிகேட் இதில் என்னுடைய உண்மையான வயதை தெரிந்து கொள்ளுங்கள் என தன்  வருங்கால மனைவியிடம் சர்டிபிகேட்டை காட்டி தெளிவுபடுத்தியுள்ளார். அதன் பிறகுதான் அவர்களுடைய சந்தேகம் நீங்கி உள்ளது.

மேலும் அவர் என் வாழ்க்கையில் விளையாடுவது விக்கிபீடியாவுக்கு அவ்வளவு ஒரு சந்தோஷம் போல, உண்மையில் நான் 1978-ல் தான் பிறந்தேன் என்று கலகலப்பாக கூறியுள்ளார். அதன்பிறகு தற்போது விக்கிபீடியாவில் முனீஸ்காந்தின் சரியான வயது போடப்பட்டிருக்கிறது.

அவருக்கு திருமணம் ஆன புதிதில் ஐம்பத்தி ஆறு வயதில் ஒரு நடிகருக்கு திருமணமா, இவ்வளவு தாமதமான திருமணம் ஏன் என்று ஊடகங்களில் பல செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Trending News