Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

மகனுக்காக வலிகள் நிறைந்த வாழ்க்கையில் நெப்போலியன்.. மனம் திறந்து அம்பானிக்கு சவால் விடும் வல்லவராயன்

மகனுக்காக வலிகள் நிறைந்த வாழ்க்கையில் நெப்போலியன்.. மனம் திறந்து அம்பானிக்கு சவால் விடும் வல்லவராயன்

Actor Nepolean: தமிழ் சினிமா ஹீரோக்களில் உயரத்தில் இன்று வரை யாராலும் போட்டி போட முடியாத ஒரே ஆள் நெப்போலியன். எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி என இவர் நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் இன்று வரை தமிழ் […]

Actor Nepolean: தமிழ் சினிமா ஹீரோக்களில் உயரத்தில் இன்று வரை யாராலும் போட்டி போட முடியாத ஒரே ஆள் நெப்போலியன். எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி என இவர் நடித்த ஒரு சில கதாபாத்திரங்கள் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காமல் இருக்கிறது.

சினிமாவை தாண்டி அரசியல் களம் கண்டு திமுக அரசின் ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நெப்போலியன் இருந்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் மேன் பவர் தொழிலை ஆரம்பித்து அதில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மயிலாப்பூரில் ஆரம்பித்த இந்த தொழில் தற்போது அமெரிக்கா, ஐரோப்பா வரை பரந்து விரிந்து இருக்கிறது. ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அமெரிக்காவில் நிறுவி நெப்போலியன் குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

அது மட்டும் இல்லாமல் அங்கு இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார். தன்னுடைய மகன் தனுஷுக்கு ஏற்பட்ட தசை அலர்ஜி நோய் சிகிச்சை அங்கு சிறப்பாக பார்க்கப்படும் என்பதால்தான் நெப்போலியன் அமெரிக்கா வரை சென்றதற்கு காரணம்.

சிறந்த சிகிச்சை முறையில் அந்த நோயின் தாக்கத்தை பெரிய அளவில் குறைத்து விட்டார்கள். இருந்தாலும் தனுஷின் வாழ்க்கை இரண்டு சக்கர நாற்காலியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அவருக்கு திருநெல்வேலியில் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தம் முடித்திருக்கிறார்கள்.

நெப்போலியனின் மகனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது என்பதால் வீடியோ காலில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமணத்தை ஜப்பான் நாட்டில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

திருமணத்துக்கு வருபவர்களை சொகுசு கப்பலில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருக்கிறார். மகனின் உடல் நலத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்ட நெப்போலியன் தற்போது திருமணத்தை கோலாகலமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

அதுவும் அம்பானி தான் மகன் ஆனந்த அம்பானிக்கு திருமணம் செய்தது போல் ஒரு திருமணத்தை தன் மகனுக்கு செய்ய வேண்டும் என்பது நெப்போலியனின் பெரிய கனவு.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.