Nepolean’s Jeevan Technologies: நடிகர் நெப்போலியன் அவருடைய உயரத்திற்காகவே தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை பெற்றவர். இந்த உயரத்திற்காகத்தான் துரைசாமி குமரேசன் ஆக சினிமாவுக்கு வந்த இவருக்கு நெப்போலியன் என்ற பெயரும் கிடைத்தது. இன்று வரை நெப்போலியன் என்று சொன்னவுடன் 90 கிட்ஸ்களுக்கு ஞாபகம் வருவது அவர் வேஷ்டியை மடித்துக் கொண்டு குஷ்பூ உடன் ஆட்டம் போட்ட பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடல் தான்.
தற்போது நெப்போலியன் சினிமா மற்றும் அரசியல் இரண்டு துறைகளிலும் இருந்து மொத்தமாக ஒதுங்கி விட்டார். குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வரும் இவர் உலக அளவிய பிசினஸ்மேன்களில் ஒருவராக இருக்கிறார். தமிழகத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து நடிகராக மட்டுமே இருந்த இவர் எப்படி அமெரிக்காவில் போய் செட்டில் ஆனார் என எல்லோருக்குமே சந்தேகம் இருக்கலாம்.
நடிகர் நெப்போலியன் கடந்த 2000ம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்னும் ஐடி கம்பெனியை தொடங்கினார். அவர் அரசியலில் இருந்தபோது நிறைய பேர் அவரிடம் வேலைவாய்ப்பு கேட்டது விளைவு தான் இது போன்ற ஒரு ஐடியா வந்தது என அவர் சொல்லியிருக்கிறார். ஐடி கம்பெனிகளுக்கு தேவையான தீர்வுகள் மற்றும் வேலை ஆட்களை கொடுப்பதுதான் இந்த ஜீவன் டெக்னாலஜிஸ் கம்பெனியின் வேலை.
ஜீவன் டெக்னாலஜி கம்பெனியில் வேலைக்கு சேர்பவர்களுக்கு ட்ரெய்னிங்கும் கொடுக்கப்பட்டு நல்ல ஐடி கம்பெனியில் வேலையும் பார்த்து கொடுக்கப்படுகிறது. மயிலாப்பூரில் ஆரம்பித்த இந்த தொழில் இப்போது உலகம் முழுக்க இருக்கும் ஐடி கம்பெனிகளில் முக்கியமான நிறுவனமாக மாறும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. தற்போது ஜீவன் டெக்னாலஜிஸ் கம்பெனியின் ஹெட் குவாட்டர்ஸ் அமெரிக்காவில் தான் இருக்கிறது. நெப்போலியன் தன் குடும்பத்தோடு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
அவருடைய மகனுக்கு தசை வளர்ச்சி குறைபாடு இருப்பதால் அதேபோன்று குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஜீவன் அறக்கட்டளை நிறுவனமும் நடத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் கொரோனா காலகட்டத்தில் தன்னுடைய சொந்த கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் வாங்கி காய்கறிகளும் பயிரிட்டு வருகிறார் நெப்போலியன். நெப்போலியனின் ஜீவன் டெக்னாலஜிஸ் கம்பெனி ஆண்டு வருமானம் மட்டும் 61 மில்லியன் ஆகும்.