வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

நடிப்பு அரக்கன் பசுபதி ரசிகர்கள் மனதை வென்ற 6 படங்கள்.. கமலுக்கு நிகராக நடித்த ‘கொத்தாள தேவர்’

நடிகர் பசுபதி ஒரு பன்முக கலைஞன். வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், காமெடியன் என அத்தனை கேரக்டர்களிலும் பக்காவாக பொருந்தக்கூடியவர். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றபோது நடிகர் நாசர் மூலம் கமலுக்கு அறிமுகமானார். பசுபதி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த ஆறு கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.

திருப்பாச்சி – பட்டாசு பாலு: ஒரு நடிகனாக பசுபதியின் முகம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான படம் திருப்பாச்சி தான். இந்த படத்தில் பசுபதி பட்டாசு பாலு என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். அதிரடி சண்டை காட்சிகள், மிரள வைக்கும் உடற்கட்டு என்று இல்லாமல் தன்னுடைய குரலாலேயே வில்லத்தனத்தை காட்டியிருப்பார்.

Also Read:இந்த மாதிரி ரோல் இனிமே வேண்டாம்.. பசுபதிக்கு இப்படி நடிக்க தான் ஆசையாம்.!

விருமாண்டி – கொத்தாள தேவர்: பசுபதி விருமாண்டி திரைப்படத்தில் நடித்த கொத்தாள தேவர் என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் மட்டும் இல்லாமல், சினிமா பிரபலங்களாலும் பெரிதும் கவனிக்கப்பட்டார். நடை, உடை, பாவனை என அத்தனையிலுமே தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபராக தன்னை நிலை நிறுத்தி இருப்பார் பசுபதி.

வெயில் – முருகேசன்: இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் பரத் மற்றும் பசுபதி இணைந்து நடித்த திரைப்படம் வெயில். இந்த படம் முழுக்க முழுக்க பசுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஹிட்டான திரைப்படம். எப்போதுமே கதாநாயகனாக நடித்து விட்டால் அடுத்தடுத்து அப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எல்லோருமே ஆசைப்படுவார்கள். ஆனால் பசுபதி இந்த படத்திற்குப் பிறகு வந்த கதாநாயகன் வாய்ப்பை கூட தவிர்த்து விட்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

Also Read:சார்பட்டா பசுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 11 படங்கள்.. ஒன்னும் ஒன்னும் வேற ரகம்!

அசுரன் – முருகேசன்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட திரைப்படம் அசுரன் இந்த படத்தில் பசுபதி தனுஷை விட ஒரு படி மேலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தனுஷின் மூத்த மகன் இறந்த பிறகு வரும் காட்சிகளில் ரசிகர்களை கலங்கடித்து இருப்பார்.

மஜா – ஆதி: பட்டாசு பாலுவாக, ‘தூள்’ ஆதியாக, கொத்தாள தேவராக தமிழ் சினிமா ரசிகர்களை வில்லத்தனத்தில் மிரட்டிய பசுபதி, விக்ரம் நடித்த மஜா திரைப்படத்தில் வடிவேலுவுக்கு இணையாக காமெடி காட்சிகளில் நடித்து படம் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

குசேலன் – பாலகிருஷ்ணன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பசுபதி நடித்த திரைப்படம் குசேலன். இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். வறுமை ஒரு பக்கம், பிள்ளைகளின் ஆசை ஒரு பக்கம், நட்பு ஒரு பக்கம் என மொத்த உணர்ச்சிகளையும் சலனமே இல்லாத முகத்தில் காட்டி தன்னை மீண்டும் ஒரு சிறந்த நடிகன் என நிரூபித்து இருந்தார் பசுபதி.

Also Read:கண்ணிலேயே சினிமாவிற்குப் ஃபார்முலா சொன்ன பசுபதி.. குருநாதா இத்தனை நாள் எங்க போனீங்க!

Trending News