Prabhas: பாகுபலி படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பிரபாஸ் நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருடைய பிறந்தநாளை உலகம் முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். பல்துறை திறமைகளால் பிரபலமான தெலுங்கு நடிகர், பிரபாஸ், இந்திய திரையுலகில் மிக அதிக வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறார்.
பிரபாஸ், 2015 முதல் Forbes India Celebrity 100 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார். இந்திய திரையுலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் திகழும் பிரபாஸுக்கு அடுத்தடுத்து 5 சூப்பர் ஹிட் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
5 சூப்பர் ஹிட் படங்கள்
சலார்: பகுதி 2 – சௌர்யாங்க பர்வம்: பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள சலார் படத்தின் இரண்டாம் பகுதி சௌர்யாங்க பர்வம் 2025 கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகிறது. இந்த படம் இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.
ராஜா சாப்: மாருதி இயக்கும் ராஜா சாப் திரைப்படம் 2025 ஏப்ரல் 10ல் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஒரு சக்திவாய்ந்த, அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். விறுவிறுப்பான அரச மரபுகளை மையமாகக் கொண்ட படம். பிரபாஸ் தன் பூர்வீக சொத்தை மீட்டெடுக்க முயலும் கதை. இந்த படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும்.
பௌஜி: பௌஜி படத்தில் பிரபாஸ் சமூகத்தின் நீண்டகால அடக்குமுறைக்கு எதிராக போராடும் வீரராக பிரபாஸ் நடிக்கிறார். இது 2025 இறுதியில் வெளியிடப்படும். ஹனு ராகவபுடி இயக்கும் இந்த தெலுங்கு படம், 1940களில் நடக்கும் தேசபக்தி கதையாகவும், வரலாற்று சம்பவங்களை மையமாகக் கொண்டதாகவும் இருக்கும்.
ஸ்பிரிட்: ஸ்பிரிட் திரைப்படம் 2024 நவம்பர் 30ல் வெளியிடப்படுகிறது. இந்த படம் பிரபாஸ் மற்றும் சந்தீப் ரெட்டி வாங்கா இணையும் முதல் படம் ஆகும். அர்ஜுன் ரெட்டி மற்றும் கபீர் சிங் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ள வாங்கா, இந்த படத்தில் பிரபாஸை முந்தையதைவிட மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்சியளிக்கவுள்ளார். காவல்துறை வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை இருப்பதாகக் கூறப்படுகிறது, இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், ஜப்பானீஸ், சீன, கொரிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கண்ணப்பா: முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வரும் கண்ணப்பா திரைப்படம், 2024 டிசம்பரில் திரைக்கு வர உள்ளது. இந்த படம் கடவுளான சிவனுக்கு தீவிர பக்தி காட்டிய புராண கதாபாத்திரமான கண்ணப்பனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பெரும் கோலாகல காட்சிகளும், பக்தி சார்ந்த கதையையும் மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், பிரபாஸின் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என நம்பப்படுகிறது.