திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

67வது பிறந்த நாளை கொண்டாடும் கன்னக்குழி நாயகன் பிரபு.. ஆடம்பர பங்களா, தியேட்டர் என தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு

Actor Prabhu’s Net Worth: கோலிவுட்டின் பெரிய குடும்பம் என்றால் அது நடிகர் திலகத்தின் குடும்பம் தான். கன்னக்குழி நாயகனாக தனக்கென ஒரு இடத்தை பிடித்த இளைய திலகம் பிரபு இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சமீபத்தில் தான் இவருடைய மகள் ஐஸ்வர்யாவுக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கோலாகலமாக திருமணம் முடிந்திருந்தது. அதை அடுத்து இன்று பிறந்த நாளை கொண்டாடும் பிரபுவுக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு காலத்தில் ஹீரோவாக ரவுண்டு கட்டி வந்த இவர் இப்போது குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் சேர்த்து வைத்த சொத்து மதிப்பின் விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. ஹீரோவாக கோடிக்கணக்கில் சம்பாதித்த பிரபு இப்போது கேரக்டர் ரோலுக்காக 2 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

Also read: கல்யாணம் மட்டும் சிம்பிளா.? மாப்பிள்ளை ஆதித்க்கு பிரபு கொடுத்த வரதட்சணை என்ன தெரியுமா.?

அதேபோல் இவருக்கு சொந்தமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆடம்பர பங்களாக்கள் இருக்கிறது. மேலும் தயாரிப்பு நிறுவனம், மல்டி காம்ப்ளக்ஸ், தியேட்டர்கள் என பிசினஸிலும் இவர் லாபம் பார்த்து வருகிறார். அதன்படி பிரபு சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு மட்டுமே 90 கோடி ரூபாயை தாண்டும்.

இது இல்லாமல் சிவாஜி சேர்த்து வைத்த சொத்தின் ஒரு பகுதியும் இவரிடம் இருக்கிறது. அதையும் சேர்த்தால் இவருடைய சொத்து மதிப்பு 300 கோடி ஆகும். இதில் இவர் தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு சேர வேண்டிய முறையான சொத்துக்களை பிரித்துக் கொடுக்கவில்லை என்ற ஒரு பேச்சும் இருக்கிறது.

அதனாலயே இவருடைய மகளின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இரண்டாவது திருமணத்திற்கு கூட இவர் பல கோடி வரதட்சணை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதையெல்லாம் தாண்டி நடிகர் திலகத்தின் வாரிசுகளிடம் அள்ள அள்ள குறையாத சொத்துக்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: சொந்தத்தில் திருமணம் செய்தும் நடந்த விவாகரத்து.. முதல் கணவரை பிரபு மகள் பிரிய காரணம் இதுதான்

Trending News