புதன்கிழமை, ஜனவரி 15, 2025

42 வயதிலும் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் பிரேம்ஜி.. அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்த விஷால் போன்ற நடிகர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் பிரேம்ஜியும் ஒருவர். பல காலமாக இவர் திருமணத்தின் மீது நாட்டம் இல்லாமல் இருக்கிறார்.

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். அதில் வெங்கட் பிரபு மனைவி, குழந்தைகள் என்று குடும்ப வாழ்வில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் பிரேம்ஜி மட்டும் தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

இதனால் உங்களுக்கு திருமணம் எப்போது என்று பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அவரை கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் வினைதா என்ற ஒரு பெண்ணுடன் கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோ ஒன்று சில நாட்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் பரவி வந்தது.

இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் இவரை தான் நீங்கள் கல்யாணம் செய்து கொள்ள போகிறீர்களா என்று கேட்டனர். மேலும் பிரேம்ஜிக்கு கல்யாணம் என்ற செய்தியும் ஊடகங்களில் வெளியானது. இதனால் பதறிப்போன பிரேம்ஜி இது குறித்த ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

அதாவது நாற்பத்தி மூன்று வயதாகியும் திருமணம் ஆகாத அவர் எனக்கு கல்யாணத்தின் மீது விருப்பம் கிடையாது. குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு வளர்க்கவும் விருப்பமில்லை. அதனால் நான் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக தான் இருக்க போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக பிரேம்ஜி திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விடுவார் என்று நினைத்த ரசிகர்களுக்கு அவரின் இந்த பதில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தி வருகின்றனர்.

Trending News