Prithviraj: சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் பெரிய அளவை பிரபலமடைந்தவர் தான் நடிகர் பிருத்விராஜ். இவரை பப்லு என்று சொன்னால்தான் பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.
ராதிகா நடித்த வாணி ராணி சீரியல் மூலம் ரசிகர்களிடையே பரீட்சயமானவர். நடிகர் அஜித்குமாரின் அவள் வருவாளா, பிரபுதேவா நடித்த டைம்ஸ் போன்ற படங்களில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் பெரிய அளவில் வைரல் ஆவதற்கு காரணம் அவருடைய இளம் காதலி தான்.
பப்லுவின் முன்னாள் காதலிக்கு நடந்த ரகசிய திருமணம்
ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி இருக்கும் நிலையில் இவர் தன்னைவிட 20 வயது சின்ன பெண்ணை காதலித்து அவருடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்தார்.
சீத்தல் என்ற அந்த பெண்ணுடன் இவர் வெளியிட்ட நிறைய வீடியோக்கள் இணையவாசிகளிடம் அதிக அளவில் வெறுப்பை சம்பாதித்தது.
யார் கண் பட்டது தெரியவில்லை இவர்களுக்குள் பிரேக்கப் நடந்து விட்டது. இது குறித்து பப்லு மற்றும் சீத்தல் தெளிவாக எதுவுமே சொல்லவில்லை.
சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று இருவரும் பிரிந்தது உண்மைதான் என அறிவித்தார் சீத்தல்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ஆண் ஒருவர் கையை பிடித்தபடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
மேலும் அந்த புகைப்படத்துடன், உங்களுக்காக பெரிய திட்டங்களை வைத்திருக்கிறார், எங்கள் இருவருக்குமே எப்போதுமே கடவுளுடைய ஆசிர்வாதம் இருக்கும்.
நல்லதோ, கெட்டதோ, பணக்காரரோ , ஏழையோ மரணம் மட்டுமே நம்மை பிரிக்க வேண்டும் என்று ஒரு நீண்ட பதிவையும் எழுதி இருக்கிறார்.