திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

46 வயதில் பெயர் மாற்ற என்ன காரணமோ.. வெளியில் வரும் ராகவா லாரன்ஸ் பூசிய சாயம்

Raghava lawrence -chandramukhi 2: நடிப்பதற்கு முன்பு பிரபல டான்ஸராக அனைவராலும் அறியப்பட்டவர் தான் ராகவா லாரன்ஸ். இவர் ஆரம்பத்தில் பின்னணி நடனமாடுபவராக இருந்திருக்கிறார். குறிப்பாக சிக்கு புக்கு, சிக்கு புக்கு ரயிலே என்னும் பாட்டிலும் பிரபுதேவா உடன் இணைந்து ஆடி உள்ளார். இவர் தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் முனி என்ற திரைப்படத்திற்கு பிறகு வெளியே தெரிய ஆரம்பித்தார். இவரின் படங்கள் அனைத்தும் திகில் ஊட்டும் வகையிலே இருக்கும் குறிப்பாக காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா, காஞ்சனா 2 போன்றவை கூறலாம். இவர் பல்வேறு சமூக சேவை செயல்களிலும் ஈடுபாடு கொண்டவர். தற்போது இவர் தனது பெயரை மாற்றி வைத்துள்ளார், அதற்கு என்ன காரணம் என பார்ப்போம்.

Also Read:விஜய், லைக்காவிடமிருந்து ஒதுங்கி இருப்பதன் பின்னணி.. பிரச்சனையில் சிக்கிய வரை காப்பாற்றிய அண்ணன்

இவர் தற்போது பி வாசு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் சந்திரமுகி 2 படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். வடிவேலு, லட்சுமிமேனன், ராதிகா, சரத்குமார் போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் லாரன்ஸ்க்கு ராகவா என்ற பெயர் மட்டும்தான் வருகிறது.

ராகவா லாரன்ஸ் தனது சிறுவயதில் இருக்கும் போது “பிரைன் ட்யூமரில்” அவதிப்பட்டு வந்தார். அப்பொழுது அவரின் அம்மா இவருக்கு குணமாகவேண்டும் என்று ராகவேந்திரர் சுவாமியை வேண்டியுள்ளார். அதற்குப் பிறகு பிரைன் ட்யூமர் சரியானது என்று இவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதற்கு காரணம் ராகவேந்திரர் சுவாமி தான் என்றும் கூறினார். அதன்பிறகு இவர் தனது பெயருக்கு முன்னால் ராகவா என்று பெயரை சேர்த்துக் கொண்டார். ஆனால் அப்போதிலிருந்து லாரன்ஸ் என்ற பெயரையும் இன்று வரை நீக்கவே இல்லை.

Also Read:வாரிசுகளுக்கு போட்டியாக நடிக்கும் 5 அப்பா ஹீரோக்கள்.. இப்பவும் நடிப்பு அரக்கனாக சுற்றிவரும் சீயான்

தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்ததால் தனது பெயரை மாற்றி உள்ளார். ராகவா என்ற பெயரை மட்டும் பயன்படுத்தி உள்ளார். லாரன்ஸ் என்ற பெயரை தூக்கி விட்டார். இவ்வளவு நாளாக மாற்றாத இவர் இப்போது மட்டும் எதற்காக மாற்றி உள்ளார் என்பதை ரசிகர்களிடையே உண்டான கேள்விகளாகும். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யாருக்குமே எதுவும் தெரியாமல் இருந்தது.

இப்படி பெயர் மாற்றம் அளவுக்கு என்னதான் காரணம் என்று கேட்டபோது, கிடைத்த தகவல் படத்தின் கதாநாயகி கங்கணா ரணாவத் இந்து மத கொள்கைகளை உடையவர். இவர் ஏற்கனவே மதம் சார்ந்த நிறைய சர்ச்சைக்கு உள்ளானார். இவருடன் எந்த மனஸ்தாபமும் வேண்டாம் என்று நினைத்து இருக்கலாம். அதற்காக இவர் பெயர் மாற்றி உள்ளார் என தெரிந்தது. அது மட்டும் இல்லாமல் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் ,கீரவாணியும் அதேபோன்று இந்து மதக் கொள்கையை உடையவர் என தெரிந்தது. இவர்கள் இருவருக்காகவும் பெயரை மாற்றி உள்ளார் என தகவல் வந்துள்ளது.

Also Read:லாஸ்லியா போல காதல் கிசுகிசுக்காக தேர்வு செய்யப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்.. 19 வயது நடிகையை தூக்கிய விஜய் டிவி

நமக்கு தெரிந்த லாரன்ஸ் இதுவரைக்கும் யாருக்காகவும் தனது பெயரை மாற்றிக் கொண்டதே கிடையாது . இவர் சமூக கருத்துகளை தைரியமாக பேசக்கூடியவர். அப்படி இருக்கும் இவர் இப்போது கங்கணா ரணாவத்துக்கு பயந்து வைத்தாரா இல்லை, அதெல்லாம் ஏதுமில்லை உண்மையாகவே மதம்தான் மாறிவிட்டாரா என்று கேள்வி வந்துள்ளது ரசிகர்கள் மத்தியில்.

Trending News