ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

லாரன்ஸை ஹீரோவாக்கி அழகு பார்த்த இயக்குனர்.. கடும் வறுமையில் உதவி கிடைக்காமல் இறந்த பரிதாபம்!

Actor Raghava Lawrence Director: நடிகர், இயக்குனர், டான்ஸ் மாஸ்டர் என பன்முக திறமை கொண்ட ராகவா லாரன்ஸ் படிப்படியாக சினிமாவில் முன்னேறியவர். இவர் எஸ்ஜே சூர்யா உடன் இணைந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரை ஹீரோவாக்கி அழகு பார்த்த இயக்குனர், வறுமையில் உதவி கிடைக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகமான படம் அற்புதம். அந்த படத்தின் இயக்குனர் தான் அற்புதன், அவர் இன்று இறந்து விட்டார். அவரால்தான் லாரன்ஸ் ஹீரோவானார், அதேபோல் அவரால்தான் அவர் இயக்குனராகவும் ஆனார். ஆனால் அற்புதன் படங்கள் எதுவும் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த வேளையில் இறந்துவிட்டார்.

இயக்குனர் அற்புதன் லாரன்ஸின் அற்புதம் படத்தின் தொடர்ச்சியாக ஷாம் நடிப்பில் வெளியான ‘மனதோடு மழைக்காலம்’ படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அதன் பின் தெலுங்கு பக்கம் சென்ற அற்புதன், அங்கு உதய் கிரண் நடித்த ‘செப்பவே சிறுகாளி’ என்ற படத்தை இயக்கினார்.

Also read: சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

அங்கும் வெற்றி பெற முடியவில்லை. பின்பு சினிமா வாய்ப்புகள் சுத்தமாகவே இல்லாமல் போன அற்புதன், வறுமையில் குடும்பத்தை சமாளிக்க முடியாமல் சினிமாவை விட்டு விலகினார். விருகம்பாக்கத்தில் அவருடைய குடும்பத்துடன் வசித்து வந்தவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அற்புதன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர், சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53 தான். அற்புதனுக்கு ஜாஸ்மின் என்ற மனைவியும், ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர்.

அவர் குடும்பம் இப்போ அவரை இழந்தும் பணம் இல்லாமலும் கஷ்டப்படுகிறது. இதை லாரன்ஸ் கவனிக்க வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். கண்டிப்பாக லாரன்ஸ் கண்டு கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகப் போகும் 4 படங்கள்.. வாய் சவடால் விட்டு புஸ்ஸுன்னு போன சைக்கோ த்ரில்லர்

Trending News