வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பெண்களின் கனவு நாயகன் தாத்தாவாகிட்டாரா?. பேரனுடன் ரகுமான் வெளியிட்ட புகைப்படம்

ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்கள் மனதை கவரும்படி ஹீரோக்கள் வருவதுண்டு. அந்த வகையில் நடிகர் ரகுமான் ஒரு காலகட்டத்தில் பெண்களின் கனவு நாயகனாக வளம் வந்தார். அதுவும் இவர் நடிப்பில் வெளியான புது புது அர்த்தங்கள் என்ற படத்தின் மூலம் நிறைய ரசிகர்கள் பெற்றார்.

மேலும் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை ரகுமான் பெறவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் தற்போது வரை இருந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் தனக்கு கிடைக்கும் வில்லன், குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Also Read : மேடையில் மனைவிக்கு கண்டிஷன் போட்ட ஏ ஆர் ரகுமான்.. எந்த நட்சத்திரங்களும் செய்யாத விஷயம்

மேலும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ரகுமான் மதுராந்தக சோழனாக நடித்து இருந்தார். சரித்திர நாவலான இந்த படத்தில் ரகுமானின் பங்களிப்பு இருந்தது பெருமைக்குரிய விஷயமாக நினைப்பதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஹீரோவாக எப்படி இருந்தாரோ அதேபோல் தான் தற்போது வரை இருந்து வருகிறார்.

அதே இளமையுடன் தனது உடலை மெருகேற்றிக் கொண்டு இருக்கிறார். ரகுமான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகளின் திருமணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது.

Also Read : அவரை தூக்கிவிட தான் பத்து தல படத்துல நடிச்சேன்.. சிம்பு உங்களை தூக்கிவிட தான் ஏஆர் ரகுமான் வந்தார் தெரியுமா?

இந்நிலையில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் ரகுமான் தனது பேரக்குழந்தையான அயானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதற்குள்ளாகவே ரகுமான் தாத்தா ஆகிவிட்டாரா என ரசிகர்களை இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

பேரனுடன் ரகுமான்

rahuman

Also Read : அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா

Trending News