திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

Rajinikanth: வரப்போகுது சூப்பர் ஸ்டாரின் பயோபிக்.. கண்ணை காட்டிய ரஜினி, தீயா வேலை செய்யும் தயாரிப்பாளர்

Raini: ரஜினி நடிப்பில் வேட்டையன் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வர இருக்கிறது. அதேபோல் லோகேஷ் கூட்டணியின் கூலி படமும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் பயோபிக் உருவாக இருப்பது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ஏற்கனவே சாவித்ரி, ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக வந்திருக்கிறது.

அதே போல் இளையராஜாவின் பயோபிக்கும் உருவாகி வருகிறது. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் வாழ்க்கை வரலாறை பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க இருக்கிறாராம்.

சூப்பர் ஸ்டாரின் பயோபிக்

தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது அனைத்தும் முடிந்தவுடன் படம் பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் தன் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுத நினைத்திருந்தார். ஆனால் அதில் உண்மை அனைத்தையும் சொல்ல வேண்டும்.

அந்த தைரியம் தனக்கு இல்லாததால் அதை பாதியில் நிறுத்தி விட்டேன் என அவரே குறிப்பிட்டு இருந்தார். அப்படிப்பட்டவர் இப்போது பயோபிக் படத்திற்கு சம்மதித்திருப்பது ஆச்சரியம் தான்.

Trending News