திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு ரஜினி தலையெடுத்த படம்.. 90களில் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆன தலைவர்

Actor Rajini’s super hit movies in 90’s:  இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரரால் அடையாளம் காணப்பட்டு அபூர்வராகங்களில் எண்ட்ரி கொடுத்த சரித்திர நாயகன் ரஜினி அவர்கள்1975 தொடங்கி இன்று வரை170 மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் தமிழ் சினிமாவின் ஸ்டைல் மன்னனாக இருக்கும்  தலைவர்,  90ஸ் காலகட்டத்தை தனக்கு உரியதாக தன் ஹிட் படங்களின் மூலம் ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.

1990 களில் அவர் நடித்த அத்தனை படமும்  பிளாக் பஸ்டர் ஹிட். பாக்ஸ் ஆபீஸ் கிங் காக வலம் வந்த இவரின் படங்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் குறிப்பாக ஜப்பானில் சக்கை போடு போட்டது.

தளபதி: கர்ணன் துரியோதனனின் நட்பை சாயலாக கொண்டு வெளிவந்த தளபதி, ரஜினியை வழக்கமாக அல்லாமல் புது பரிமாணத்தில் ஜொலிக்க செய்தார் மணிரத்தினம். நட்பு என்ற ஒற்றை வார்த்தைக்கு உயிரையும் கொடுக்கும் ரஜினியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர். ரஜினி மற்றும் மம்மூட்டி நடித்த படம் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் ரசிகர்களுக்கு விருந்தானது.

மன்னன்: 1992 இல் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் ரஜினி, விஜயசாந்தி, குஷ்பூ, விசு கவுண்டமணி, மனோரமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. கவுண்டமணி மற்றும் ரஜினியின் காம்போ, காமெடியில் ரசிகர்களை  வயிறு வலிக்கச் செய்தது.  என்ன படிச்சிருக்க என்று கவுண்டமணி கேட்க, “வேலை செய்ற அளவுக்கு படித்து இருக்கிறேன்” என்று ரஜினி சொல்லும் இந்த டயலாக் இன்றும் இளைஞர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

அண்ணாமலை: ரஜினியை கிராபிக்ஸில் நீல புள்ளி கொண்டு சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு அறிமுகப்படுத்திய  முதல் திரைப்படம் அண்ணாமலை. “வந்தேண்டா பால்காரன்” என்று பால்காரனாக வாழ்ந்திருந்த ரஜினி வெகுளித்தனமான நட்பு, துரோகத்தை எதிர்க்கும் ஆக்ரோஷம் என கலவையான உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தி அண்ணாமலையை தனி ஒருவனாக தூக்கிப் பிடித்திருந்தார்.

எஜமான்: ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி, மீனா, கவுண்டமணி, செந்தில் கூட்டணியில் 1993 இல் வெளிவந்த படம் எஜமான். கிராமத்து கதையை தொய்வில்லாமல் கொடுத்த எஜமானில் தனக்குரிய பிராப்பர்டி ஆன துண்டை மாற்றி போட்டு மாஸ் காட்டி இருப்பார். மீனாவிற்காக மாட்டுவண்டி பந்தயத்திலும், பட்டாம்பூச்சி பிடிப்பதிலும், தூக்கு சட்டியை தூக்கி பிடித்ததிலும், எதிரியை வருந்த செய்து வென்றதிலும் உயர்ந்து நின்றார் எஜமான்.

பாட்ஷா: சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தேவாவின் இசையில்1995 வெளிவந்த பாட்சா ரஜினியை பக்கா மாசாக வெளிப்படுத்தி இருந்தது. இவரின் எவர்கிரீன் வசனமான “ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” டயலாக்கை  அனைவரையும் முழங்கச் செய்திருந்தார். இந்த காலகட்டத்தில் பாட்ஷா ஸ்டிக்கர் ஒட்டாத ஆட்டோவே இல்லை எனலாம் அரசியலுக்கு வந்தால் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற  அளவுக்கு தமிழக மக்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டு இருந்தார் தலைவர்.

Also Read: நாங்க வளர்வது உன்னால பொறுத்துக்க முடியலன்னா போய் சாவுடா.. சிவகார்த்திகேயனுக்காக கர்ஜிக்கும் ரஜினி!

முத்து: 1995 இல் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் முத்து இந்தியாவின் பல மொழிகளிலும் திரையிடபட்டது. மேலும் ஜப்பானில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமை கொண்டது முத்து. இந்தப் பெருமையை சமீபத்தில் வெளியான ஆர் ஆர் திரைப்படம் வரும் வரை 20 ஆண்டுகளாக தக்க வைத்துக் கொண்டிருந்தது. இதில் அரசனாகவும் ஆண்டியாகவும் என வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை கூறி அனைத்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தார் முத்து.

அருணாச்சலம்: “அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா” என்று வந்த அருணாச்சலம் ருத்ராட்சத்தின் வழிகாட்டுதலின் படி கிடைத்த 30 கோடியை 30 நாட்களில் அசால்ட்டாக செலவு செய்து 4 எதிரியை கடைசி 5 நிமிஷத்தில் வென்றிருப்பார் , சத்தியத்தின் பாதை வழி நடப்பான், “மக்கள் பணம் மக்களுக்கே கொடுப்பான்” என்று அரசியலில் குதிக்க வருவது போல் பிம்பம் ஏற்படுத்திக் கொடுத்தார் சுந்தர் சி.

படையப்பா: 1999 ஆண்டு 210 பிரிண்ட்களுடன் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படையப்பா வசூலில் பல மடங்கு லாபம் சம்பாதித்தது.  இளமை மற்றும் வயதான என்று  இரு விதமான தோற்றத்தில்  தூள் கிளப்பி இருந்தார் படையப்பா. பலவித பஞ்ச் டயலாக்குகள் பேசி ரசிகர்களை குஷி படுத்தி இருந்தார். மாப்பிள்ளை படத்திற்கு பின் பலமான ஆளுமை மிக்க பெண்ணுடன் மோதி பட்டையை கிளப்பி இருந்தார் படையப்பா.

ஏற்றி விட தந்தையும் இல்லை ஏந்தி கொள்ள தாய்மடியும் இல்லை  எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் புகழின் உச்சிக்கு தன்னைக் கொண்டு சேர்த்து எளிமையானவன் போல் தோற்றமளிக்கும் ரஜினி ஒரு சரித்திரம் அல்ல ஒரு சகாப்தம்

Also Read: படையப்பா படத்தில் நடிக்க சிவாஜி போட்ட கண்டிஷன்.. அசால்டா கூல் பண்ணிய சூப்பர் ஸ்டார்

Trending News