தமிழ் சினிமாவில் சரியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது ஒரு கலையாகவே பார்க்கப்படுகிறது. நடிப்பைத் தாண்டி இந்த கலை தெரிந்தால் மட்டுமே ஒரு நடிகர் தமிழ் சினிமாவில் நிலைநாட்ட முடியும் . அப்படி தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இன்று வரை இதனை கடைபிடித்துக் கொண்டு வரும் நடிகர் தான் ராஜ்கிரண்.
ஆரம்ப காலங்களில் அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கிறது. இதனால் இவர் தமிழ் சினிமாவின் ஒரு வெற்றிகரமான நடிகராகவே பார்க்கப்படுகிறார். ஆனால் இவர் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இவருடைய தோற்றத்தைப் பார்த்து யாருமே இவரை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொள்ளவில்லை. பார்ப்பவர்களை பயமுறுத்தும் முகம் , கம்பீரமான மிடுக்கான நடை, கட்டாக வைத்திருந்த உடல்கட்டு என்று பார்க்கும் அனைவருக்கும் இவர் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தான் இவருக்கு சரியாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தனர்.
அப்படி இவர் நடிப்பதற்காக அணுகிய பல திரைப்பட நிறுவனங்களும் நீங்கள் ஹீரோவாக நடிப்பதற்கு பதிலாக வில்லனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் நல்ல பெயர் வாங்கி விடலாம் என்று கூறி உள்ளனர். அதனைக் கேட்ட ராஜ்கிரன் வில்லன் கதாபாத்திரம் எனக்கு சரிப்பட்டு வராது என்றும் நான் மிகவும் மென்மையான குணம் கொண்டவன் என்றும் என்னால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இன்றைய காலகட்டம் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டுக்கு சமீப காலத்தில் நடிகர் விஜய்சேதுபதி பல படங்களில் ஹீரோவாக நடித்தாலும் இவர் வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே அவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை வாங்கித் தந்தது. அதுமட்டுமின்றி அவர் வில்லனாக நடித்த பிறகு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அவர் ஏற்று நடிக்கும் அளவிற்கு நடிப்பில் அவர் தேர்ந்து இருக்கிறார்.
இப்படி பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று ராஜ்கிரண் நடித்து முன்னணி நடிகராக வலம் வருவார் என்று நினைத்த போது அவர் நடித்தால் ஹீரோ மட்டும் தான் என்று கூறி பல படங்களை தவிர்த்து விட்டாராம். இருந்தாலும் தன்னிடம் குறையாக சொன்ன அத்தனையையும் மாற்றி ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து ஒரு ஹீரோ என்பதையும் தாண்டி அந்த கதாபாத்திரத்தை சரியாக செய்து இன்றளவும் அந்த படத்தை பற்றி நாம் நினைக்கும் போது அவரின் ஞாபகம் வரும் அளவிற்கு பல படங்களை நடித்திருக்கிறார்.
இருந்தாலும் ரஜினி, சத்யராஜ் போன்ற மிகப் பெரிய நடிகர்கள் ஆரம்பத்தில் வில்லனாக இருந்துதான் பின் படிப்படியாக ஹீரோ அந்தஸ்தை பெற்றனர். அந்த ரூட்டை ராஜ்கிரண் பின் தொடர்ந்து இருந்தால் இன்று அவர் மிகப்பெரிய முக்கிய நடிகராக மாறி இருக்கலாம். ஆனாலும் இப்போதும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் கௌரவ தோற்றத்தில் வந்து நம்மை இன்றளவும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டு தான் இருக்கிறார் ராஜ்கிரண் அவர்கள்.