90களில் வெளிய வந்த ‘என்ன பெத்த ராசா’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும், அதன் பிறகு ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானவர் நடிகர் ராஜ்கிரண்.
அதன்பின் இவர் தமிழ் சினிமாவில் சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்து மட்டுமன்றி ஒரு சில திரைப் படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார். அதிலும் குறிப்பாக இவருடைய படங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்,
பெரும்பாலும் குடும்ப கதையை மையமாகக் கொண்டு ராஜ்கிரண் எடுக்கும் படங்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும். அப்படிப்பட்ட ராஜ்கிரணுக்கு இளையராஜா, படத்தின் கதையை கேட்காமலேயே பாடல்களை போட்டு கொடுப்பாராம்.
இளையராஜாவால் தான் இவர் படங்கள் எல்லாம் ஹிட் ஆனது. ராஜ்கிரணின் முதல் படமான என்னப் பெத்த ராசாவே படத்தையும், அதைத் தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களுக்கெல்லாம் தொடர்ந்து இசையமைத்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா.
ஆகையாலே இவ்வளவு வெற்றிகளைப் பெற்றுத் தந்த இளையராஜாவிற்கு 60 அடி கட் அவுட் வைத்து உள்ளார். அது மட்டுமின்றி இளையராஜா கையினால்தான் நூறாவது நாள் சீல்டு வாங்குவேன் என்று அடம்பிடித்து அவருக்காக காத்துக் கொண்டிருந்தார். இன்றுவரை இளையராஜாவிற்கு கடவுளுக்கு நிகரான மதிப்புக் கொடுத்து வருகிறார் ராஜ்கிரண்.
இப்படி இளையராஜா மீது அவர் நன்றி மறக்காத ஒரு மனிதராய் இருந்தார். தற்போது ராஜ்கிரண் சமீப காலமாக வெளியாகும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து சினிமாவை விட்டு விலகல் இருந்து கொண்டிருக்கிறார்.