புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வேலில போற ஓணானை வேட்டியில் விட்ட ரஞ்சித்.. பல கல்யாணம் செய்து மாட்டிக்கொண்ட பூமர் அங்கிள்

ரஞ்சித் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என சினிமாவில் பல அவதாரத்தில் நடிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். இப்பொழுது சீரியலில் கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” என்று வார இறுதி நாட்களில் நடக்கும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி உள்ளார்.

கடந்த நான்கு, ஐந்து மாதமாக புது கலாச்சாரம் ஒன்று சென்னையில் தோன்றி இருக்கிறது. அதாவது சென்னை மாநகராட்சி ஆரம்பித்து வைத்த இந்த நிகழ்ச்சி இப்பொழுது சீர்குலைந்து போகிறது என குற்றம் சாட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட இடத்தை பிளாக் செய்து அங்கே வார இறுதி நாட்களில் மக்கள் அனைவரும் கூடி கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றனர்.

ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டிருந்த இந்த நிகழ்ச்சி சமீப காலமாக அருவருப்பாக இருக்கிறது என ரஞ்சித் பத்திரிகை நிருபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதாவது “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி என்று ஒன்றை நடத்தி அந்த தெருவில் உள்ளவர்கள் பொது இடங்களில் கூத்தடிப்பதாக கூறுகிறார்.

தெரியாத ஆணும், பெண்ணும் ஆடிக் கொள்கின்றனர். அவர்கள் அணிந்திருக்கும் ஆடையும் கொஞ்சம் கவர்ச்சிகரமாக இருக்கிறது இது கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார். இப்பொழுது ரஞ்சித்தின் இந்த குற்றச்சாட்டிற்கு எல்லா பக்கமும் பதிலடி வருகிறது.

ரஞ்சித் சினிமாவில் பல பெண்களை கல்யாணம் செய்து விவாகரத்தும் செய்தி இருக்கிறார். இவருக்கு கலாச்சாரம் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. இவர்கள் மாதிரி எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியும் செய்ய விடாமல் நிறைய பூமர் அங்கிள் இருக்கிறார்கள் என கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Trending News