Actor RedinKingsley- Sangeetha latest photos: நேற்று நடிகர் ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா திருமணம் மைசூரில் திடீரென நடந்தது. இதை யாராலுமே நம்ப முடியல, முதலில் இவர்களது திருமண புகைப்படத்தை பார்த்ததும் ‘அது ஏதாவது பட ஷூட்டிங்கின் பொது எடுக்கப்பட்டதாக இருக்கும்’ என பலரும் நம்ப மறுத்து விட்டனர்.
பின்பு ரெடின் கிங்ஸ்லியின் நண்பரான நடன இயக்குனர் சதீஷ் தனது எக்ஸ் தளத்தில், ‘இது உண்மையான திருமணம் தான்’ என பதிவிட்டு எல்லாரையும் நம்ப வைத்தார். இப்போது இந்த ஜோடி ஹனிமூன் கொண்டாட்டத்தில் இருக்கிறது. 46 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருந்த ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை கரம் பிடித்ததற்கு ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
46 வயதில் திருமணம் செய்வதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று இந்த காதல் ஜோடி சோசியல் மீடியாவில் பதிவிடும் கலர்ஃபுல்லான புகைப்படங்கள் பார்ப்பதற்கே செம்மையா இருக்கு. இந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.
ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா லேட்டஸ்ட் போட்டோஸ்
ரெடின் கிங்ஸ்லி போலவே சீரியல் நடிகை சங்கீதாவும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். இவர் அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம், எங்க வீட்டு மீனாட்சி போன்ற சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்ல வெள்ளித் திரையிலும் வீட்ல விசேஷம், விசித்திரம், சுல்தான், பாரிஸ் ஜெயராஜ், மாஸ்டர் போன்ற படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா கலர்ஃபுல்லான புகைப்படங்கள்
ஆனால் காமெடி பீஸ் போல் சினிமாவில் இருக்கும் ரெடின் கிங்ஸ்லிக்கும் வில்லி சங்கீதாவிற்கும் ரொம்ப நாளைக்கு முன்பே காதல் பத்திக்கிச்சு. விரைவில் திருமணம் செய்து கொள்ள நினைத்த இவர்கள் திடீரென்று கல்யாணம் செஞ்சுட்டு ரசிகர்களுக்கு இப்போது ஷாக் கொடுத்துள்ளனர்.
ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா வைரல் போட்டோஸ்