திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

நிச்சயதார்த்தம் வரை சென்ற காதல்.. இப்போதுவரை கவலைப்படும் அஜித்தின் மைத்துனர்

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கிய நடிகர் ரிச்சர்ட், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தின் மூலம் நமக்கு அறிமுகம் ஆனார். இந்தப் படத்தில்தான் அவருடைய தங்கை ஷாமிலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றார்.

நடிகை ஷாலினியின் அண்ணனான ரிச்சர்ட் நடிகர் அஜித்திற்கு மைத்துனர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர் தமிழில் காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் அறிமுகம் ஆனது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரின் முதல் படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. அதைத் தொடர்ந்து அவர் நடித்த சில திரைப்படங்களும் தோல்வியை தழுவியது. அதனால் அவர் சில காலம் தமிழ் சினிமாவை விட்டு விலகி தெலுங்கு, மலையாளம் பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடம் அதிக அளவில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து அவர் நடித்த ருத்ரதாண்டவம் திரைப்படமும் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது.

அவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு கவனிக்கப்படும் நடிகராக முன்னேறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக அவர் மெனக்கெட்டு செய்யும் சில விஷயங்களும் அவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்து இருக்கிறது.

இவ்வாறு தன்னுடைய சினிமா கேரியரில் முன்னேறிக் கொண்டிருக்கும் அவர் 44 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவருக்குள் இருக்கும் ஒரு முடிந்து போன காதல் தான்.

அவர் பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மகளை தீவிரமாக காதலித்து இருக்கிறார். அந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. இடையில் அவருக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக திருமணம் நடைபெறாமல் நின்று விட்டது.

அந்த காதலால் தான் அவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் அந்த இசையமைப்பாளரின் மகள் யார் என்ற தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Trending News