Test- S.V Shekher: மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் டெஸ்ட் வெளியானது. தியேட்டருக்கு வராமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் படம் ரிலீஸ் ஆனது.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மாதவன் நடிப்பு நன்றாக இருந்தாலும் மற்ற அம்சங்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்பது ஆடியன்ஸின் கருத்து.
அதிலும் இணையவாசிகள் நயன்தாராவை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் எஸ் வி சேகர் தன் இணையதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார்.
எஸ் வி சேகர் போட்ட பதிவு
அதில் நான் ஒரு படத்தில் இருந்து விலகினாலோ அல்லது விலக்கப்பட்டாலோ அந்த படம் தியேட்டருக்கு வராது. அப்படியே வந்தாலும் ஓடாது.
இது வரலாறு வரலாறு தொடர்கிறது என டெஸ்ட் பட போஸ்டர் உடன் இந்த பதிவை போட்டுள்ளார். உடனே நெட்டிசன்கள் என்ன நடந்தது என கமெண்டில் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் முன்பே இப்படத்தில் அவர் கமிட் ஆகி பின்பு நீக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்.
அதாவது இப்படத்தில் அவர் சித்தார்த்தின் தந்தையாக நடிக்க கதை கேட்டு சம்மதித்திருக்கிறார். அதற்காக அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் சித்தார்த் உங்களுடன் நடிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அவர் மோடி எதிர்ப்பாளர்.
உங்களுடன் இணைந்து நடித்தால் நெட்டிசன்களின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். அதனால் அவர் மறுக்கிறார் என சொன்னாராம்.
உடனே எஸ் வி சேகர் அப்படி என்றால் சித்தார்த்தை எனக்கு 50 லட்சம் கொடுக்க சொல்லுங்க என சொல்லி இருக்கிறார். அதை அடுத்து இயக்குனர், படத்தில் கேரக்டரை மாற்றி விட்டோம்.
அதனால் உங்களை நடிக்க வைக்க முடியாது என லெட்டர் அனுப்பி இருக்கிறார். இதற்கு பின்னணியில் சித்தார்த்தின் கடுமையான டார்ச்சர் இருந்திருக்கிறது.
அந்த கடுப்பில் தான் எஸ் வி சேகர் தற்போது இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார். பயங்கரமான சாபமா இருக்கே. இனி சார் விட்டு பக்கம் எந்த இயக்குனரும் போக மாட்டாங்க.