திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாமன்னன் படம் ஓட வாய்ப்பே இல்ல.. இப்பவே உதயநிதி, வடிவேலு தலையில் இடியை இறங்கிய பிரபலம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் தான் மாமன்னன். ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பே இப்படத்தில் இருந்து வெளிவந்த போஸ்டர், பாடல் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

அது மட்டுமின்றி இந்த படத்தின் டைட்டில் கேரக்டரில் வடிவேலு நடிக்க இருப்பதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் இயக்குனரும் வடிவேலுவின் நடிப்பு பற்றியும், கதாபாத்திரம் பற்றியும் ஏகப்பட்ட பில்டப்புகளை கொடுத்துள்ளார். இதனாலேயே இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர்.

Also read: மாரி செல்வராஜின் சக்சஸ் ஃபார்முலா.. மாமன்னன் வடிவேலுவை நம்பி தல தப்புமா!

இதற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது உதயநிதி இப்போது முழு நேர அரசியலில் இறங்கி விட்டதால் இப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் மீசை ராஜேந்திரன் இந்த படம் நிச்சயம் ஓட வாய்ப்பே கிடையாது என்று கூறி ஒரு இடியை இறக்கியுள்ளார்.

இதற்கு அவர் ஒரு காரணத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார். அதாவது நடிகர்கள் அரசியலில் கால் பதித்தாலே அவர்களுடைய சினிமா வாழ்வு முடிந்து விடும். அதன் பிறகு அவர்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெறாது. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிகர்களை சொல்லலாம். விஜயகாந்த் கூட அரசியல் வருகைக்குப் பிறகு சில படங்களில் நடித்தார்.

Also read: புதுசா கிளம்பியிருக்கும் மாரி செல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மாமன்னன் கதையில், கர்ணன் பட கேரக்டர்!

ஆனால் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த சென்டிமென்ட்டின் அடிப்படையில் மாமன்னன் உதயநிதிக்கு ஒரு வெற்றி படமாக இருக்காது என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இப்படம் வடிவேலுவின் திரை வாழ்வில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அந்த அளவுக்கு அவர் இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். அதேபோன்று உதயநிதியும் தன்னுடைய கடைசி படம் காலத்துக்கும் பேர் சொல்லும் வகையில் இருக்க வேண்டும் என்று தன் ஒட்டு மொத்த திறமையும் இப்படத்தில் காட்டி இருக்கிறார். இப்படி இருக்கும் சூழலில் மீசை ராஜேந்திரன் இவ்வாறாக ஒரு விஷயத்தை கூறி இருப்பது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

Also read: ஆடியோ லாஞ்சில் தட்டி தூக்க இருக்கும் மாமன்னன்.. 2 பிரபலங்களை மடக்கி போட்ட ரெட் ஜெயண்ட்

Trending News