Sai Pallavi: நம்ம சினிமா நடிகைகளுக்கு என்னதான் ஆச்சுன்னு தெரியல. ஒவ்வொரு ரசிகர்களும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட பொண்ணு கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கலாம்னு தவமாய் தவமிருந்து கொண்டும் இருக்கிறார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு எல்லாம் அல்வா கொடுத்துவிட்டு இந்த நடிகைகள் விவாகரத்தான ஆளையே காதலிப்பது, கல்யாணம் செய்வது என இப்போது ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த லிஸ்டில் இப்போது சாய் பல்லவியும் சேர்ந்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக மலர் டீச்சர் ஆக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் நடிகை சாய் பல்லவி.
விவாகரத்தான நடிகருடன் ஏற்பட்ட வில்லங்க காதலா?
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள உலகத்திலும் இவருக்கு ரசிகர்கள் அதிகம். சமீப காலமாக இவருக்கு தொடர்ந்து தெலுங்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. தற்போது சாய்பல்லவி தெலுங்கில் பெரிய ஹீரோ ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
அதுவும் அந்த நடிகர் விவாகரத்து ஆனவராம். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. தெலுங்கு மாநிலத்தின் பத்திரிக்கை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. இது சாய் பல்லவி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.