Actor Santhanam: நடிகர் சந்தானத்திற்கு சமீபத்தில் ரிலீசான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. தோனி தயாரிப்பில் உருவான LGM படத்தை பின்னுக்கு தள்ளி இந்த படத்தின் வசூல் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு முன்பு வரை சில வருடங்களாக சந்தானத்திற்கு எல்லாமே தொடர் தோல்வி படங்கள் தான் சந்தானம் சினிமா கேரியர் க்ளோஸ் என பேசும் அளவிற்கு நிலைமை மோசமாக இருந்தது.
இதற்கு மொத்த காரணமும் சந்தானம் தான். கொடிகட்டி பறந்த சந்தானம் திடீரென நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவை எடுத்தது தான் அவரின் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணமாக ஆகிவிட்டது. ரசிகர்கள் தொடங்கி பலரும் இந்த ஹீரோ வேலை எல்லாம் வேண்டாம், காமெடியனாக நடித்தால் தான் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று சொல்லியும் சந்தானம் அதை எல்லாம் காது கொடுத்து கேட்பதாக இல்லை.
Also Read:தக்காளியை போல் சந்தானத்திற்கு வந்த வாழ்வு.. ஒரு படம் ஓடினா இப்படியா சம்பளத்தை கூட்டுறது
நடித்தால் ஹீரோ தான் என்று முடிவெடுத்து தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்திற்கு மார்க்கெட் குறைந்ததோடு, பணரீதியாகவும் பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு அவரே ப்ரொடியூசர் ஆக இருந்ததால் சம்பளம் இல்லாமல் தான் நடித்துக் கொண்டு இருந்து இருக்கிறார்.
மேலும் சந்தானத்திற்கு பாரீஸ் ஜெயராஜ், பிஸ்கோத், ஏஜென்ட் கண்ணாயிரம்,குளு குளு,சபாபதி போன்ற படங்கள் தொடர் தோல்வியை கொடுத்தன. இதனால் ஒரு கட்டத்தில் காமெடியனாக மீண்டும் நடிக்க ஆரம்பித்து விடலாம் என்று கூட சந்தானம் நினைத்திருக்கிறார். நடிகர் அஜித்குமாரின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக முடிவானபோது சந்தானம் அந்த படத்தில் காமெடியானாக தான் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
Also Read:பழைய பாணியை வைத்து உருட்டும் சந்தானம்.. தொட முடியாத உயரத்திற்கு சென்ற போட்டி நடிகர்
இந்த அளவுக்கு வெறுத்துப்போன சந்தானத்தின் பொறுமைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்த பரிசாக டிடி ரிட்டன்ஸ் படத்தின் வசூல் அமைந்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சந்தானம் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டராக இருந்தால் கண்டிப்பாக காமெடியனாகவும் நடிப்பேன் என்று தன்னுடைய முடிவையும் சொல்லி இருக்கிறார்.
இந்த வெற்றி படம் தான் நமக்கு நல்ல டர்னிங்க் பாயிண்ட் என்பதை புரிந்து கொண்ட சந்தானம் சம்பளத்தை வேறு உயர்த்தி விட்டார். இப்பொழுது தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் 8 முதல் 10 கோடி வரை சம்பளம் கேட்டு தலை தெறிக்க ஓட விடுகிறார்.