வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

Actor Sarathkumar: ஒரு வில்லன் ஹீரோவாக அறிமுகமாகி 90களின் காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் சரத்குமார். அதிரடி ஆக்சன் ஹீரோவாகவும், குடும்ப பாங்கான கதைகளிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சிலும் பல கேரக்டர்களில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

வானம் கொட்டட்டும்: ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ரம் பிரபு நடித்த வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் சரத்குமார் போஸ் காளை என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். கோபத்தால் ஒரு கொலையை செய்துவிட்டு சிறைவாசம் முடித்து வரும் போஸ் தன் பிள்ளைகளாலேயே அவமானப்படுத்தப்படுவது, பின்னர் குடும்பத்தை பாதுகாக்க கஷ்டப்படுவது என நடிப்பில் மிளிரி இருப்பார் சரத்குமார்.

Also Read:இனிமே சின்ராச கையில பிடிக்கவே முடியாது.. சூப்பர் ஹிட் படத்தின் பார்ட் 2-வுக்கு தயாராகும் சரத்குமார்

பொன்னியின் செல்வன்: இந்திய சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களின் மிகப்பெரிய கனவாக இருந்தது உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்வது தான். சரத்குமார் தன்னுடைய ரீ என்ட்ரியில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராயின் கணவர் பெரிய பழுவேட்டையாராக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் அந்த கேரக்டருக்கு ஏற்றவாறு தன்னுடைய சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.

வாரிசு : தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் அன்று வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவான இந்த படத்தில் சரத்குமார் ராஜேந்திரன் பழனிச்சாமி என்னும் கேரக்டரில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்த படத்திலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தார்.

ருத்ரன்: சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் திரைப்படத்தில் பூமிநாதன் என்னும் கேரக்டரில் சரத்குமார் நடித்திருந்தார். வெளிநாட்டில் வேலைக்காக சென்று குடியிருப்பவர்களின் பெற்றோர்களை குறி வைத்து அவர்களைப் கொன்று அதன் மூலம் சொத்துக்களை பறிக்கும் கும்பலின் தலைவனாக சரத்குமார் இந்த படத்தில் மிரட்டி இருந்தார்.

Also Read:சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

கஸ்டடி : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான திரைப்படம் கஸ்டடி. அதிரடி திரில்லர் கதை அமைப்பை கொண்ட இந்த படத்தில் சரத்குமார் ஐ ஜி நடராஜ் என்னும் கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சரத்குமாரின் நடிப்பு கவனிக்கும்படி இருந்தது.

போர் தொழில்: நடிகர் சரத்குமாருக்கு இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது போர் தொழில். இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்திருந்தார். பெண்களை மையமாகக் கொண்டு நடக்கும் சீரியல் கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரிகளாக இவர்கள் இருவரும் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

Also Read:கொடுத்த காசுக்கு திருப்தி, இந்த 7 விஷயங்களுக்காக போர் தொழில் பார்க்கலாம்.. பழுவேட்டரையரின் வெறித்தனம்!

Trending News