கையைப் பிடித்து கடித்து காயம்.. நடிகை ஷகிலா மீது தாக்குதல்.! இவ்வளவு வெறியா?

Actor Shakeela has been attacked: மலையாள சினிமாவிலும் அதைத் தொடர்ந்து தமிழிலும் கவர்ச்சி நடிகையாக ஒரு காலத்தில் ரவுண்டு கட்டியவர் தான் நடிகை ஷகிலா. இப்போது அவர் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதோடு சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொள்கிறார். இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த சமயத்தில் சம்பாதித்துக் கொடுத்த பணத்தை சொந்த குடும்பமே ஆட்டைய போட்டுவிட்டது.

இப்போது அவர் சொந்த வீடு கூட இல்லாமல் பொருளாதார ரீதியாய் ரொம்பவே கஷ்டப்படுகிறார். இப்ப அவருடைய வளர்ப்பு மகளும் ஷகிலாவை புரிந்து கொள்ளாமல் தாக்கியுள்ளார். இது தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. குடும்பத்தால் ஏமாற்றப்பட்ட ஷகிலா தனக்கென ஒரு துணை வேண்டும் என்று அவருடைய அண்ணன் மகள் ஷீத்தலை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

தற்போது இளம் பெண்ணாக இருக்கும் ஷீத்தலுக்கும் ஷகிலாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷீத்தல் ஷகிலாவை தாக்கி விட்டு சென்றுள்ளார். இந்த விவகாரத்தில் சமாதானம் பேசுவதாக ஷகிலாவின் வழக்கறிஞர் சௌந்தர்யா, ஷீத்தலை ஷகிலா வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதை அடுத்து ஷீத்தலின் தாயார் சசி மற்றும் அவருடைய அக்கா ஜமீலா இருவரும் ஷகிலாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

நடிகர் ஷகிலாவின் மீது தாக்குதல் ஏற்பட்டுள்ளது

அப்போது சமாதான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, ஷகிலா தரப்பு வழக்கறிஞர் சௌந்தர்யாவை ஷீத்தல் தாக்கியுள்ளார். இதில் ஷீத்தலின் தாயார் சசி, வழக்கறிஞர் சௌந்தர்யாவின் கையைப் பிடித்து கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். இதனால் சௌந்தர்யா கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஷீத்தல் அவருடைய தாயார் சசி ஆகியோரை போலீஸ் தேடி வருகிறது. தேவை இல்லாமல் ஷகிலா குடும்பத்தில் பேச்சு வார்த்தை நடத்த போன கொடுமைக்காக ’சனியன தூக்கி பனியன்ல போட்டுகிட்டது’ போல் வழக்கறிஞர் சௌந்தர்யாவிற்கு ரத்தக்காயம் ஏற்பட்டது தான் மிச்சம். இருந்தாலும் ஷகிலாவின் பணத்தை எல்லாம் தின்று ஏமாற்றிய குடும்பம், இப்போது வளர்ப்பு மகளை வைத்து அவரை மறுபடியும் தாக்கி இருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →