புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வாரிசால் சாக்லேட் பாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்.. கோலிசோடா இயக்குனருடன் இணையும் கூட்டணி

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் கொண்டாட்டமாக வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் வெற்றி நடை போட்டு வருகிறது. விஜய் நீண்ட வருடங்களுக்கு பிறகு குடும்பப் பின்னணி கொண்ட திரை கதையில் நடித்திருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கு மீண்டும் பழைய விஜய்யை பார்த்த திருப்தியை கொடுத்ததாக அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வாரிசு திரைப்படம் குடும்ப பின்னணியை கொண்ட கதை என்பதால் இதில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு , சங்கீதா கிரிஷ், சம்யுக்தா, கணேஷ் வெங்கட்ராமன், சுமன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் ஒன்று கூடியிருக்கிறார்கள்.

Also Read: தளபதி 67 பட பூஜைக்கு வந்த முக்கிய 2 இயக்குனர்கள்.. அடுத்த பட கூட்டணிக்கு போட்ட அடித்தளம்

இதில் நடிகர் ஷாம் இயக்குனர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் விஜய் ஹீரோவாக நடித்த குஷி திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்திருப்பார். தன்னுடைய முதல் படமான 12 பியில் அப்போதைய முன்னணி ஹீரோயின்களான சிம்ரன் மற்றும் ஜோதிகாவுடன் இணைந்து நடித்தவர் இவர். நடிகர் ஷாம் 2000 வருடத்தின் ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக ரசிகைகளை கவர்ந்தவர்.

அதன் பின்னர் ஏன் நீ ரொம்ப அழகா இருக்க, இயற்கை, லேசா லேசா போன்ற வெற்றி படங்களில் ஷாம் நடித்திருந்தார். சாக்லேட் பாயாக இருந்த இவர் ஒரு சில படங்களில் நெகட்டிவ் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்ததினால் மொத்தமாக வாய்ப்புகளை இழந்து கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருந்தார்.

Also Read: ஆடியோ உரிமம் மட்டும் இத்தனை கோடி பிசினஸா.? தளபதி 67 இப்பவே கண்ண கட்டுதே

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்கும் வாய்ப்பு ஷாமுக்கு கிடைத்தது. இந்த படம் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து தனக்கு வாய்ப்பு வரும் என்று நினைத்த இவருக்கு இப்போது பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பே கிடைத்திருக்கிறது.

கோலி சோடா திரைப்படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்தினால் கோலிவுட்டில் ஜெயித்துக் காட்டிய இயக்குனர் தான் விஜய் மில்டன். இவர் தற்போது ஷாமை கதாநாயகனாக வைத்து படம் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். ஒரு வழியாக வாரிசு படத்தின் வெற்றி மூலம் நடிகர் ஷாமுக்கு தமிழ் திரை உலகில் மீண்டும் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.

Also Read: 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்த ஜோடி.. தளபதி 67 அப்டேட்டால் குதூகலமான சோசியல் மீடியா

Trending News