சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ப்ளாப்பான படத்தை வைத்து கலர் கலராய் ரீல் விடும் சித்தார்த்.. இதுல ஓடிடி வேறயா! என்ன கொடுமை ப்ரோ இது

Actor Siddharth: தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் சித்தார்த் தற்போது தமிழ் சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முயற்சி செய்து வருகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்திற்கு பிறகு தமிழில் படங்கள் எதுவும் பண்ணாமல் இருந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார் இவர். அதே போல் ரசிகர்களையும் சந்தித்து நிறைய விஷயங்களை பேசி இருக்கிறார்.

பாய்ஸ் படம் முதல் டக்கர் வரை தமிழ் சினிமா அனுபவங்ளை பற்றி பகிர்ந்து வரும் இவர், தான் தவறவிட்ட படங்களை பற்றியும் ரொம்ப வெளிப்படையாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அதே நேரத்தில் அட்டர் ப்ளாப் ஆன தன்னுடைய ஒரு படத்தை மிகப்பெரிய வெற்றி படம் எனவும், அதை விரைவில் ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் பயங்கரமாக உருட்டியிருக்கிறார்.

Also Read:கலாச்சார சீர்கேட்டுக்கு துணை போன சித்தார்த்.. மேடையிலேயே கொந்தளித்த பிரபலம்

கடந்த 2016 ஆம் ஆண்டு சித்தார்த் நடிப்பில் இயக்குனர் தீரஜ் வைத்தி இயக்கிய திரைப்படம் ஜில் ஜங் ஜக். இந்த படத்தில் சித்தார்த் நடித்ததோடு மட்டுமில்லாமல் அவரே தயாரித்தும் இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க பிளாக் காமெடி தீமில் வெளியானது. மேலும் நிறைய நம்ப முடியாத விஷயங்களை கொண்ட கற்பனை உலகில் நடப்பது போலவும் எடுக்கப்பட்டிருந்தது.

படம் முழுக்க நகைச்சுவை காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருந்தாலும், படத்தின் திரைக்கதை மக்கள் மனதில் நிற்கவில்லை. பத்திரிக்கைகளிடம் இருந்து கலைவையான விமர்சனங்களை பெற்றதோடு, ரேட்டிங்கிலும் குறைந்த மதிப்பையே பெற்றிருந்தது. உண்மையை சொல்ல போனால் சித்தார்த் நடிப்பில் இப்படி ஒரு படம் வெளியானது பலருக்கும் தெரியாது.

Also Read:கதை புரியல என இயக்குனரை கழட்டிவிட்ட சித்தார்த்.. படம் சூப்பர் ஹிட் ஆனதால் புலம்பும் பரிதாபம்

ஆனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் சித்தார்த் இந்த படத்தை வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் என ஒரு தயாரிப்பாளராக சொல்லியிருக்கிறார். மேலும் இந்த படத்தை நாங்கள் ஆயிரம் பேரில் சிலருக்கு பிடிக்கும் படமாக எடுக்கவில்லை எனவும், 10 பேருக்கு ரொம்ப பிடித்த படமாக எடுத்தோம், அந்த பத்து பேருக்கு படம் பிடித்திருந்தது, வசூலிலும் திருப்தி அளித்தது என்று சொல்லியிருக்கிறார்.

மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்த இந்த படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சித்தார்த் கண்டிப்பாக ஏதோ ஒரு பிளானில் தான் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் செய்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. திட்டமிட்டபடி படத்தை ரீ ரிலீஸ் செய்யும் பொழுது சித்தார்த் கொடுத்த பில்டப்புக்காகவே படம் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Also Read:Takkar Movie Review- பணக்காரராக ஆசைப்பட்ட சித்தார்த்தின் பாதை மாறிய பயணம்.. டக்கர் படத்தின் முழு விமர்சனம் இதோ!

Trending News