ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அட! நிஜமாவே பிரேம்ஜிக்கு கல்யாணம்ப்பா.. வைரலாகும் கல்யாண போட்டோக்கள்

Premji Marriage Photo: முரட்டு சிங்கிள் என்று சொல்லி பல வருடமாக சுற்றிக் கொண்டிருந்த பிரேம்ஜிக்கு இன்று திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெற இருக்கிறது. சிம்பு, விஷால் போன்ற நடிகர்களுக்கு இதுவரைக்கும் கம்பெனி கொடுத்துக் கொண்டிருந்த பிரேம்ஜி இன்று முதல் திருமண வாழ்வில் இணைய இருக்கிறார்.

கடந்த சிலர் தினங்களுக்கு முன்பு பிரேம்ஜிக்கு கல்யாணம் என்ற ஒரு திருமண பத்திரிக்கை இணையதளத்தில் வளம் வந்தது. முதலில் ஏதாவது படத்தின் ப்ரோமோஷன் ஆக இருக்கும் என்று இந்த பத்திரிகையை யாருமே கண்டு கொள்ளவில்லை.

அதன் பிறகு பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு அவருக்கு திருமணம் ஆக இருப்பதை உறுதி செய்தார். கட்டப்பாவை யாருக்கு கொன்னா, சொப்பன சுந்தரி இப்ப யாரு வச்சிருக்கா போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது போல பிரேம்ஜிக்கு எப்ப கல்யாணம் என்று கேள்வியும் கன்னித்தீவு போல் இருந்தது.

தற்போது அதற்கு விடை கிடைத்து இருக்கிறது. இதுவரை வந்த தகவலின் படி பிரேம்ஜிக்கு இது காதல் திருமணம் என சொல்லப்படுகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த இந்து வங்கி ஊழியர் பணியில் இருக்கிறார். இவர்களில் முதலில் இந்து தான் பிரேம்ஜியை காதலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதன் பின்னர் பிரேம்ஜி காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறார். ஒருவழியாக இருவரும் வீட்டில் பேசி திருமணம் வரைக்கும் இந்த காதலை கொண்டு வந்திருக்கிறார்கள். இப்படி ஒரு பெண்ணுக்காக எத்தனை வருஷம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு இந்து இருப்பதாக நெட்டிசன்கள் தற்போது பிரேம்ஜியை வாழ்த்தி வருகிறார்கள்.

Premji marriage
Premji marriage

இன்று திருத்தணி கோவிலில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று திருமண வரவேற்பு நடந்து இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வைரலாகும் கல்யாண போட்டோக்கள்

Premji Indhu
Premji Indhu

Premji reception photo
Premji reception photo

Trending News