வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

AK 63-இல் நடிக்க போட்டியிடும் 3 முக்கிய வில்லன்கள்.. அஜித்தின் டார்லிங்க்கு அதிக வாய்ப்பு

Actor SJ Suriya is more likely to play the villain in ajith AK-63 film: திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல் படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார். அடுத்து சிம்புவுடன் ஆன “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” படத்தில் மூலம் மிகப்பெரும் தோல்வியை கொடுத்து இனி ஆதிக் காலியாகி விடுவார் என்றாகிவிட்டது. பலர் எதிர்மறையான விமர்சனங்களையும் கடந்து நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் ஆதிக்ரவிச்சந்திரன்.

இவர் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி எஸ் ஜே சூர்யாவின் அசுரத்தனமான நடிப்பில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வசூலில் 100 கோடியை தாண்டியது. இந்த தரமான சம்பவத்துடன் தனது அடுத்த படமான ஏகே 63 யில் தன் அபிமான நட்சத்திரம் அஜித்துடன் கைகோர்த்துள்ளார் ஆதிக்.

சமீபத்தில் ஏகே 63 படத்திற்கான பூஜை சென்னையில் உள்ள தயாரிப்பு அலுவலகத்தில் பட குழுவினர்கள் சிலரை மட்டும் வைத்து நடந்து முடிந்தது. விடாமுயற்சியின் சூட்டிங் முடித்துக் கொண்டு ஏகே 63க்கு ஆயத்தமாக உள்ளார் அஜித்.

Also read: சதுரங்க வேட்டையின் பிரம்மாண்ட பதிப்பு.. அஜித் டைரக்டருக்கு சான்ஸ் கொடுத்த தனுஷ்

ஏப்ரல் மாதத்தில் ஏகே 63 படத்திற்கான ஷூட்டிங் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்திற்கு பின் 24 ஆண்டுகள் கழித்து அஜித்துடன் இணைய உள்ளார் நடிகை தபு. படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்பது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

மேலும் 80களில் நடக்கும் கதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் வில்லன் யார் என்று பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. எஸ் ஜே சூர்யா, அரவிந்த்சாமி மற்றும் விஜய் சேதுபதி என மூவரை தேர்வு செய்து உள்ளனர். யார் என்பது உறுதியாக இல்லை.

அரவிந்த்சாமி இந்த படத்தின் கேரக்டருக்கு ப்ரொபஷனல் லுக்கில் சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர் ஆனால் ஆதிக் ரவிச்சந்திரனின் ஃபேவரைட் எஸ் ஜே சூர்யா தானாம். இவர்கள் இருவரும் மறுக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதி என கூறப்படுகிறது. அஜித்தின் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க மாட்டேன் என்ற தனது கொள்கையை விட்டுக் கொடுத்து மறுபடியும் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் போனஸ் ஆக யார் வில்லனாக வேண்டுமானாலும் ஓகே தான் என்றும், மார்க் ஆண்டனி தந்த கிலுகிலுப்பில் ஆதிக் இயக்கத்தில் தல வந்தா போதும் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் இருக்கின்றனர். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதுபோல் படத்திற்கான ஃப்ரீ ப்ரொடக்ஷன் வொர்கில் பிஸியாக உள்ளனர் படக்குழுவினர்.

Also read: நெட்ஃபிலிக்ஸ் 400 கோடிக்கு மேல் தட்டி தூக்கிய 5 படங்கள்.. அஜித் சம்பளத்தை அப்படியே கொடுத்துட்டாங்க!

Trending News