புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மும்மூர்த்திகளுடன் கூட்டணி போடும் சூரி.. குமரேசன் காட்டில் கொட்டும் பேய் மழை

Actor Soori’s next movie update: அட்மாஸ்பியர் ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா பயணத்தை துவங்கிய நடிகர் சூரி, இன்று ஹீரோவாக மாறி இருக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விடுதலை படத்தில் சூரி ‘குமரேசன்’ கேரக்டரில் நடித்து அதகளம் செய்தார். இந்த படத்திற்காகவே சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து ஃபைட், ரொமான்ஸ் என தன்னை ஒரு பக்கா ஹீரோவாகவே காட்டினார்.

அதோடு விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திலும் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்கக்கூடிய வாய்ப்புகள் தான் குவிகிறது. அதிலும் மும்மூர்த்திகள் இணையும் படத்தில் சூரி கதாநாயகனாக அடுத்து நடிப்பதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விடுதலை படத்திற்கு பிறகு அடுத்ததாக இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கவிருக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் சூரி நடிக்க ஒப்பந்தமாக உள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. இளைய இசைஞானி யுவன் சங்கர் ராஜா தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் தான் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: பெரிய பட்ஜெட் படங்களை சுக்குநூறாக உடைத்த 5 சின்ன படங்கள்.. முழு ஹீரோவாக ஜெயித்த சூரி

நடிகர் சூரியின் அடுத்த படம் அப்டேட்

அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகர் மற்றும் இயக்குனர்களான சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் சூரி உடன் இணைந்து நடிக்க உள்ளனர். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மைம் கோபியும் நடிக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, வெற்றிமாறன் மூன்று நெருங்கிய நண்பர்களும் இணைந்து இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

அதே சமயம் சூரி ஹீரோவாக நடிக்க சான்ஸ் கிடைக்கும் எல்லா படங்களையும் சகட்டுமேனிக்க நடிக்காமல் சரியாக கதைகளை தேர்வு செய்து நடிப்பதாக ரசிகர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். அதோடு குமரேசனாக சூரியை பார்த்த பிறகு அவருக்கு நிறைய நல்ல நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட பட வாய்ப்புகள் குவிகிறது. இப்போது சூரியின் காட்டில் பேய் மழை கொட்டுவதால் இளம் கதாநாயகன்களின் வயிறு பொசங்குகிறது.

Also Read: அரசியலில் வடிவேலுவை மிஞ்சும் சூரி.. உதயநிதியின் கூட்டணியை வெளிச்சம் போட்டு காட்டிய ப்ளூ சட்டை

Trending News