Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கப்பல், பேங்க் என ஆச்சாரமாய் இருக்கும் ஸ்ரீகாந்த் குடும்பம்.. அடுத்த ஜெமினின்னு பெயர் வாங்கிய சாக்லேட் பாய்

கப்பல், பேங்க் என ஆச்சாரமாய் இருக்கும் ஸ்ரீகாந்த் குடும்பம்.. அடுத்த ஜெமினின்னு பெயர் வாங்கிய சாக்லேட் பாய்

23 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு ஹிட்டானதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பெரும்பாலும் இவர் ஏற்று […]

23 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். 2002 ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு ஹிட்டானதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. பெரும்பாலும் இவர் ஏற்று நடித்தது காதல் திரைப்படங்கள் தான்.

ரோஜா கூட்டம், மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்திபன் கனவு என இவரது காதல் திரைப்படங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவர்தான் அடுத்த ஜெமினி கணேசன் எனவும் கூறி வந்தனர். விஜய்யுடன், “நண்பன்” படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்தார்.

மனசெல்லாம் படத்தில் இவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. ஒரு பாடல் காட்சிகளில் அதிக அளவு சொல்யூஷன் பயன்படுத்தியதால் இவருக்கு தீக்காயம் ஏற்பட்டு சிறிது காலம் ஓய்வெடுக்கும் நிலைமைக்கு போனார். அப்போதே அவர் குடும்பத்தினர் சினிமா வேண்டாம் என அறிவுறுத்தினாராம்.

ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்டேட் பேங்கில் பணிபுரிந்தவர் அண்ணன் வெளிநாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருந்தவர். மற்றொருவர் கப்பலில் வேலை செய்து வந்துள்ளார். இப்படி மிகவும் கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்தின் குடும்பம் இப்பொழுது ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டனர். ஏற்கனவே இவருக்கு பல பிரச்சினைகள் இருந்து வந்தது. அதில் எல்லாவற்றிலும் இருந்து இவரை காப்பாற்றி கொண்டு வந்தது அவரின் குடும்பம் தான். ஆனால் இப்பொழுது வசமாக போதை பொருள் கேசில் மாட்டிக் கொண்டுள்ளார்.

T

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.